Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹில்லாரிக்கு வெற்றிவாய்ப்பு..? அதிபர் தேர்தலால் சந்தை அதிகரிப்பு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (08.11.16) காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 184.84 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.72 புள்ளிகள் உயர்ந்து 27,600.71 புள்ளிகளாக இருந்தது. சுகாதாரம், உலோகம் மற்றும் ரியலஎஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன. 
 
இன்று காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய சந்தை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சர்வதேச சந்தை அதிகரித்து காணப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று அமெரிக்க தேர்தலை முன்னிட்டு முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டதால் சந்தை சற்று ஏற்ற, இறக்கத்துடனும், பிளாட்டாகவும் காணப்பட்டது. எனினும் வர்த்தகத்தின் இடையே அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளின்டன் தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பால் சந்தை அதிகரித்து நிறைவடைந்தது. 
 
இதுமட்டுமின்றி இந்திய பங்குச் சந்தையில் ஆட்டோ, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் வர்த்தகத்தின் இறுதியில் சந்தை அதிகரித்து நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 132.15 புள்ளிகள் உயர்ந்து 27,591.14 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 46.50 புள்ளிகள் உயர்ந்து 8,543.55 என்ற நிலையில் நிறைவடைந்தது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா மோட்டார்ஸ் 540.20 6.69
டாடா மோட்டார்ஸ் (டி) 345.55 5.40
கெயில் 439.10 2.99
பி.எச்.இ.எல் 143.20 2.98
டெக் மஹிந்திரா 454.15 2.09
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா 635,40 -2,98
சிப்லா 535,30 -1,91
அரவிந்தர் ஃபார்ம் 755,65 -1,52
டாடா பவர் 74,40 -1,26
அதானி துறைமுகங்கள் 289,85 -1,24
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ