Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1000 , 500 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது: கருப்பு பண புழக்கத்தை தடுக்க மத்திய அரசு அதிரடி..!

 1000 , 500 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது: கருப்பு பண புழக்கத்தை தடுக்க மத்திய அரசு அதிரடி..!

இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் பிரதமர்  நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார்.


ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு மூலமாக ஒப்படைக்கவும்  ஆணை போட்டப்பட்டுள்ளது. 

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற  2016 டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள்  ஆகும்.

இதர முக்கிய அறிவிப்புகள் வருமாறு..
 

* புதிதாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய வடிவில் வர இருக்கும் 500,2000 ரூபாய் நோட்டுக்களின் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.
 

* வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும்  எந்த ஏடிஎம்களும். செயல்படாது. அந்த நாள்களில் புதிய 500, 2000 ரூபாய் தாள்கள் நிரப்பட இருக்கிறது..
 

* இடுகாடுகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகளில்  வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
 

* 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.
 

* சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. .
 

* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10 ம் தேதி முதல் மாற்றிக்கொள்ளலாம்.
 

* நாளை (நவம்பர் 9, 2106) ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்படாது.
 

* டிடி,செக்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
 

- சேனா சரவணன்

புதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி..!

ரூ.500, ரூ.1,000 செல்லாது என அறிவிக்கப்பட்டதன் பகீர் பின்னணி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP