Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதி மேலாண்மை ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பு

ஏற்றுமதி மேலாண்மை ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பு

இந்திய வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (Centre for Indian Trade and Export Promotion - CITEP) வர்த்தகம், தொழில்துறை, வேளாண்மை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது.


இந்த மையம் புதிதாக ‘ஏற்றுமதி மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர்’ என்ற ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பை (PG Diploma -  Export Management and Entrepreneurship)தொடங்கியுள்ளது. இதற்காக அது அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில், இந்திய வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயல் இயக்குநர் திரு. ஆர்.அசோகன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் முனைவர் கே.ஆறுமுகம், துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.மணியன், இயக்குநர் பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்தப் படிப்பில் ஏற்றுமதி மேலாண்மை, தொழில்முனைவோர் வேலை வாய்ப்பு திறன் வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close