Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரத்தின் இறுதிநாள் குவியும் எஃப்டிஐ... அதிகரிக்கும் சந்தை!

 
காலை 10.55 மணி நிலவரம்
 
நேற்றைய இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 187 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்தது. முதல் முறையாக நிஃப்டி 9,100 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது. பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. அதேசமயம் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை சரிவைச் சந்தித்தது. 
 
 
இந்த நிலையில் வாரத்தின் இறுதிநாளான இன்று (17.3.17) காலை நேர வர்த்தகத்தில் நிஃப்டி முதன் முறையாக 9,200 புள்ளிகளைத் தொட்டது. சர்வதேச சந்தை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் அதிக முதலீட்டால் இந்திய சந்தை அதிக ஏற்றத்தைச் சந்தித்தது. சந்தையில் எஃப்எம்சிஜி, ரியால்டி, மெட்டல், பவர் துறைகள் பாசிட்டிவ் ஆக வர்த்தகமாகி வருகின்றன. அந்நிய நேரடி முதலீட்டால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
 
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்செக்ஸ் பொறுத்தவரை 30,000 மற்றும் 35,000 இடையே வர்த்தகமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிஃப்டியைப் பொறுத்தவரை 9,000 மற்றும் 9,500 புள்ளிகளுக்கு இடையே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 12.90 புள்ளிகள் உயர்ந்து, 9,166.60 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 113.95 புள்ளிகள் உயர்ந்து 29,699.80 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 288.15 
லூபின் 1,470.50 
ஹெச்சிஎல் டெக் 862.85
மாருதி சுசூகி 6,204.85
டாடா ஸ்டீல் 503.10 
 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 109.90 
பார்தி ஏர்டெல் 354.25 
கெயில் 373.50 
டாடா மோட்டார்ஸ் (டி) 288.80 
ஹிண்டால்கோ 196.10
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close