Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி.... புகையிலைக்கு 290% கூடுதல் வரி விதிக்கப்படும்!

 
பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதல்லவா? இந்த வரி விகிதங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. 5%, 12%, 18%, 28% என 4 வகைகளில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி விகிதமான 28% வசூலிக்கப்படும். 
 
 
ஆடம்பர பொருள் மீதான வரி!
 
ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதற்காக, ஆடம்பர பொருட்கள் மீதான 28% வரி மீது கூடுதல் வரி ஒன்றை விதித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூடுதல் வரி எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.
 
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வியாழன் அன்று டெல்லியில் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், ஆடம்பர பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் மீதான 28%  ஜி.எஸ்.டி. வரி மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை 15% என உச்சவரம்புடன் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.  
 
இந்தக் கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களுடன் பேசினார் நிதி அமைச்சர் ஜெட்லி. 
 
 
கூடுதல் வரி 15%
 
‘‘கூடுதல் வரிக்கான உச்சவரம்பு 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டாலும், நிஜத்தில், 12 சதவிகிதமாக அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தற்போது, ஒரு சொகுசு காருக்கு 40% மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது என்றால், ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும்போது, 28% ஜி.எஸ்.டி. வரி மற்றும் 12 சதவீத கூடுதல் வரி என அதே விகிதத்தில்தான் வரி அமையும்.
 
பான் மசாலா மீதான கூடுதல் வரி 135 சதவிகித வரியும், புகையிலை மீதான கூடுதல் வரி 290% வரி இருக்கும். பீடிக்கு கூடுதல் வரி விதிப்பது பற்றி இப்போதைக்கு முடிவு எடுக்கவில்லை.
ஜூலை 1 முதல்...
மாநில ஜி.எஸ்.டி. மசோதா, யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு மசோதா ஆகியவற்றுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற்றபிறகு, நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும். 
 
அதன்பிறகு, மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், ஜூலை 1–ந் தேதி முதல், ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்துவிடும். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம், வருகிற 31–ந் தேதி நடக்கும்’’ என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close