Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கித் துறையில் கலக்கும் பெண்கள்!

 
 
 
நிதித் துறை - ஆண்கள் கோட்டையாக இருந்தது அந்தக் காலம். இன்றைக்கு உலக அளவில் மிக முக்கியமான வங்கிகளின் தலைவிகளாக பெண்களே உள்ளனர். இந்தியாவில் ஐசிஐசிஐ வங்கியின் சி.இ.ஓ. சாந்தா கோச்சர், எஸ்பிஐ வங்கியின் சி.இ.ஓ. அருந்ததி பட்டாச்சார்யா, ஆக்ஸிஸ் வங்கியின் சி.இ.ஓ. சீக்கா சர்மா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் சி.இ.ஓ. உஷா அனந்தசுப்பிரமணியன், ஹெச்எஸ்பிசி குரூப் ஜெனரல் மேனேஜர் நய்னா லால் கித்வாய் என பல பெண்கள் வங்கித் தலைமையில் இருந்தபடி கலக்கிக்கொண்டிருக்க, உலக அளவில் உள்ள முக்கியமான வங்கியிலும் இதே டிரென்ட்தான். உலக அளவில் முக்கியமான வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் சிலரைப் பற்றிய சுருக்கமாக குறிப்புகள் இதோ....
 
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்
ஜெனட் எல் யேலன் 
 
 
இவர் 2014 முதல் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் கவர்னாக  பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக் காலம் 2018 ஜனவரியில் நிறைவடைகிறது. பொருளாதார நிபுணரான இவர், தனது தர்க்கத் திறன் மூலம் உலக அளவில் பொருளாதார மேதையாக உயர்ந்துள்ளார். 
 
ரஷ்ய மத்திய வங்கி
எல்விரா நபியூலினா  
 
 
இவர், ஜூன் 2013-லிருந்து இந்தப் பதவியில் இருக்கிறார். சர்வதேச நிதி பத்திரிகையான ‘தி பேங்கர்’, 2016-ம் ஆண்டில் இவரை ஐரோப்பாவின் சிறந்த கவர்னர் எனத் தேர்ந்தெடுத்தது. தன் திறமையால், மோசமான நிலையில் இருந்த ரஷ்யாவின் பொருளாதாரத்தை மற்ற நாடுகள் திரும்பிப் பார்க்கும் வகையில் உயர்த்தியிருக்கிறார்.  
 
மலேசிய மத்திய வங்கி
 ஜிட்டி அக்தர் அஜிஸ்  
 
 
மலேசிய மத்திய வங்கியின் கவர்னராக 2000-ல் இருந்து 2016 வரை பணியாற்றினார். பாலின பாகுபாடு நிறைந்த தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, 16 ஆண்டு காலம் வங்கித் துறையில் பணியாற்றி வெற்றி பெற்றார். ஆசியாவில் பொருளதார நெருக்கடி உச்சமாக இருந்த சூழலில், இவர் தலைமையிலான குழு சிறந்த முறையில் பணியாற்றியது. 
 
தென் ஆப்பிரிக்க மத்திய வங்கி
கில் மார்கஸ்
 
 
 
 
 
 
கில் மார்கஸ், 2009-ல் இருந்து 2014 வரை தென்ஆப்பிரிக்க மத்திய வங்கியின் கவர்னராக இருந்த முதல் பெண். 
 
வங்கிகளில் பெண்களின் பங்கு இனியும் தொடரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்! 
 
தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close