Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடிசி நிறுவன பங்குகளால் அதிகரித்த சென்செக்ஸ்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
வாரத்தின் இறுதிநாளான இன்று (17.3.17) காலை நேர வர்த்தகத்தில் நிஃப்டி முதன் முறையாக 9,200 புள்ளிகளைத் தொட்டது. சர்வதேச சந்தை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் அதிக முதலீட்டால் இந்திய சந்தை அதிக ஏற்றத்தைச் சந்தித்தது. சந்தையில் எஃப்எம்சிஜி, ரியால்டி, மெட்டல், பவர் துறைகள் பாசிட்டிவ் ஆக வர்த்தகமாகின. அந்நிய நேரடி முதலீட்டால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது. 
 
 
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் சென்செக்ஸ் பொறுத்தவரை 30,000 மற்றும் 35,000 இடையே வர்த்தகமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிஃப்டியைப் பொறுத்தவரை 9,000 மற்றும் 9,500 புள்ளிகளுக்கு இடையே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் நிஃப்டி ஃபிளாட் ஆக முடிவடைந்தது. ஆனால், வர்த்தகத்தின் இறுதியில் ஐடிசி நிறுவனப் பொருட்களின் விலை உயர்ந்ததினால் சென்செக்ஸ் அதிகரித்து நிறைவடைந்தது. 2016, மே மாதத்துக்கு பிறகு இன்று ஐடிசி நிறுவன பங்குகளின் விலை 7.4% உயர்வடைந்து காணப்பட்டது. புகையிலைப் பொருட்களுக்கு வரி மேலும் உயர்த்தாததை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். இதனால் இந்நிறுவன பங்குகள் விலை உயர்வடைந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ஐடிசி நிறுவனப் பங்கின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவிகிதம் உயர்வடைந்து காணப்படுகிறது. 
 
ரியால்டி, எஃப்எம்சிஜி, ஐடி போன்ற துறை சார்ந்த பங்குகளில் முதலீட்டாளார்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கினர். அதேசமயம் நுகர்வோர் சாதனங்கள், டெல்காம், ஆயில் மற்றும் எரிவாயு பங்குகள் விலை சரிவடைந்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 6.35 புள்ளிகள் உயர்ந்து, 9,160.05 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 63.14 புள்ளிகள் உயர்ந்து 29,648.99 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஐடிசி 281.25 
ஹெச்சிஎல் டெக் 865.75 
இன்போசிஸ் 1,040.30 
விப்ரோ 504.25 
எய்கர் மோட்டார்ஸின் 24,691.40 
 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 108.10 
பார்தி ஏர்டெல் 346.85 
பேங்க் ஆப் பரோடா 164.90 
டாடா மோட்டார்ஸ் (டி) 287.00
எஸ்பிஐ 274.15 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close