Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறு நகரங்களில் களைகட்டும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு!

 
கடந்த  பிப்ரவரி உடன் முடிந்த 12 மாத காலத்தில் இந்தியாவின் சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 44% அதிகரித்து, ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
 
 
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகையான ரூ.17.9 லட்சம் கோடியில் சிறு நகரங்களின் பங்களிப்பு 16.7 சதவிகிதமாக உள்ளது.
 
மேலும், இந்த நகரங்களை சேர்ந்தவர்களில் 23.4 சதவிகிதத்தினர் டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.  
 
அதிக லாபம் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றிவந்த பொன்ஸி நிறுவனங்கள் பற்றி மக்களிடம் ஏற்பட்ட விழிப்பு உணர்வினாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை நல்ல லாபம் தரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதினாலும் மியூச்சுவல் ஃபண்டில் சிறு நகரங்களில் உள்ள மக்கள் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது என்பதே நிஜம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close