Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாப நோக்கம் கருதி விற்பனையால் பங்குச்சந்தை வீழ்ச்சி!

 
காலை 10.50 மணி நிலவரம்
 
கடந்த வாரத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை நிஃப்டி முதன் முறையாக 9,200 புள்ளிகளைத் தொட்டது. சர்வதேச சந்தை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டாளர்களின் அதிக முதலீட்டால் இந்திய சந்தை அதிக ஏற்றத்தைச் சந்தித்தது.
 
 
அந்நிய நேரடி முதலீட்டால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து காணப்பட்டது. எனினும் அன்றைய வர்த்தகத்தின் இறுதியில் நிஃப்டி ஃபிளாட் ஆக முடிவடைந்தது. அதேசமயம் ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்ததினால் சென்செக்ஸ் அதிகரித்து நிறைவடைந்தது.
 
இந்த நிலையில் இன்று (20.3.17) காலை நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்த காரணத்தினால் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து காணப்பட்டது. ஐடி, டெக், மெட்டல், வங்கி, ஆயில் மற்றும் எரிவாயு போன்ற துறை சர்ந்த பங்குகள் சரிவடைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃபடி 38.80 புள்ளிகள் குறைந்து, 9,121.25 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 141.02 புள்ளிகள் குறைந்து 29,507.97 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கோடக் மகேந்திரா 859.15
டெக் மஹிந்திரா 488.00 
ஹெச்சிஎல் டெக் 872.30 
லூபின் 1,464.35 
ஹெச்டிஎப்சி வங்கி 1,433.20
 
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 101.00 
ஐசிஐசிஐ வங்கி 275.00 
ஆக்சிஸ் வங்கி 507.55 
இன்போசிஸ் 1,021.40
பார்தி ஏர்டெல் 341.25 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close