Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச் சந்தையில் கோடிகளை குவிக்கும் சென்னையை சேர்ந்த பெண்!


பங்குச் சந்தையில் பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்க முடியும்; ஆடிட்டர் மட்டுமே பணத்தை அள்ள முடியும்; நிதி மேலாண்மை தெரிந்தால்தான் ஓரளாவது பணத்தைக் கண்ணில் பார்க்க முடியும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் நல்ல நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீட்டை மேற்கொண்டால் அதிக வருமானத்தை ஈட்டலாம்.

பங்குச் சந்தை என்றாலே நம்மில் பலருக்கும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை மட்டுமே தெரியும். ஏனெனில் இவர் மட்டுமே மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார். ஆனால், இன்றும் பலபேர் வெளிச்சத்துக்கு வராமல் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக முதலீட்டை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டி வருபவர்களும் இருக்கிறார்கள்.

இதுவரை மீடியா வெளிச்சம் படாமல் இருந்த சென்னையைச் சேர்ந்த டோலி கன்னா என்ற பெண்மனி ஒரு சில ஆண்டுகளுக்கு முன்தான் மீடியா வெளிச்சத்துக்கே வந்தார்.
எப்படி எனில், பொதுவாக நமது முதலீடு ஒரு நிறுவனத்தில் ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்போது பெயர் பொதுவில் வந்து விடும். அதுவரை எவ்வளவு வைத்திருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. அப்படித் தான் திடீர் என்று டோலி கன்னாவின் பெயரும் வெளிச்சத்துக்கு வந்தது.

இப்போது இவர் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் ஐஎஃப்பி இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் ஒரு சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார். மோட்டார் வாகன தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாகங்களை ஐஎஃப்பி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. டோலி கன்னா இந்த நிறுவனத்தில் 1.05 சதவிகித பங்குகள் அதாவது 4,26,955 பங்குகளை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 28 கோடி ரூபாய்க்கும் மேல்.

டோலி கன்னா, 1996-ல் இருந்து முதலீடு செய்து வருகிறார். இவருடைய போர்ட்ஃபோலியோவில் 18 நிறுவனப் பங்குகள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு 360 கோடி ரூபாய். முதலீட்டைப் பொறுத்தவரை ஆலோசகரே இவருடைய கணவர் ராஜிவ் கன்னாதான். 2007-ல் இவரது மொத்த பங்கு மதிப்பு ரூ. 1 கோடி அளவு தான் இருந்தது.
டோலி கன்னாவின் போர்ட்ஃபோலியோவில், நீல்கமல் (Nilkamal), எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் (Emkay Global Financial Services), ஏடிஎஃப் ஃபுட்ஸ் (ADF Foods), டாடா மெட்டாலிக்ஸ் (Tata Metaliks), மணப்புரம் ஃபினான்ஸ் (Manappuram Finnance), திருமலை கெமிக்கல்ஸ் (Thirumalai Chemicals), நிதின் ஸ்பின்னர்ஸ் (Nitin Spinners), ஸ்டெர்லிங் டூல்ஸ் (Sterling Tools) மற்றும் நோசில் (NOCIL) போன்ற நிறுவனப் பங்குகள் இடம் பிடித்திருக்கின்றன.

கடந்த 2016, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் டோலி கன்னா, மணப்புரம் ஃபினான்ஸ், ட்ரிடென்ட, ருச்சிரா பேப்பர்ஸ், பிபிஏபி ஆட்டோமோட்டிவ், ட்வரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ், ஏடிஎஃப் ஃபுட்ஸ் மற்றும் ஸ்டெர்லிங் டூல்ஸ் போன்ற நிறுவனத்தின் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். அதேசமயம், டோலி கன்னா லிபெர்ட்டி சூஸ், ஆர்எஸ் சாஃப்ட்வேர், ஏசியன் க்ரானிட்டோ மற்றும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டை ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் குறைத்துள்ளார்.

டோலி கன்னா மற்றும் அவருடைய கணவர் ராஜிவ் கன்னாவைப் பொறுத்தவரை ‘Buy Right and Sit Tight’ அதாவது `நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பங்குகளில் நீண்ட காலம் முதலீடு மேற்கொள்ளும்' முறையைப் பற்றி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும் நீல்கமல், திருமலை கெமிக்கல்ஸ், ஸ்டெர்லிங் டூல்ஸ், ஏடிஎஃப் ஃபுட்ஸ், மணப்புரம் ஃபினான்ஸ் மற்றும் நிதின் ஸ்பின்னர்ஸ் போன்ற நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட முதலீடு 300 சதவிகிதம் முதல் 950 சதவிகிதம் வரை வருமானம் ஈட்டித் தந்துள்ளது.

நீங்களும் டோலி கன்னா பங்கு பார்முலாவை பின்பற்றி லாபம் பார்க்கலாமே?

-சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close