Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்நாட்டு முதலீட்டாளர்களால் இந்திய சந்தைகள் உயர்வு!

காலை 10.50 மணி நிலவரம்
 
சந்தையைப் பொறுத்தவரை மார்ச் மாத காலாண்டு முடிவுகள் வெளியாகி வருவதையொட்டி முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சந்தையில் எந்த ஒரு ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக வர்த்தகமானது. 
 
 
இந்த நிலையின் இன்று (20.4.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஆசிய சந்தைகள் வலுவான நிலையில் வர்த்தகமாகி வருவதாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வருவதாலும் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. சென்செக்ஸ் பொறுத்தவரை கெயில், ஐடிஎஃப்சி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் உயர்ந்தும், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, என்டிஎஃப்சி, பவர் கிரிட், கோல் இந்தியா நிறுவன பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 26.60 புள்ளிகள் உயர்ந்து 9127.85 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 82.96 புள்ளிகள் உயர்ந்து 29419.53 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கெயில் 410.00 
கிராஸிம் 1,118.80 
எச்டிஎப்சி 1,527.25 
பாங்க் ஆஃப் பரோடா 178.20
அதானி போர்ட்ஸ் 331.40 
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் வங்கி வங்கி 1,544.00
ஐசிஐசிஐ வங்கி 275.10 
ஆக்சிஸ் வங்கி 491.40 
டாடா பவர் 84.75 
அரவிந்தோ பார்ம் 636.15 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close