Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய பங்குச் சந்தைகள் முன்னேற்றம்!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (20.4.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகின. ஆசிய சந்தைகள் வலுவான நிலையில் வர்த்தகமாகி வந்ததாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி வந்ததாலும் சந்தை அதிகரித்து காணப்பட்டது. சந்தையைப்  பொறுத்தவரை காலை நேர வர்த்தகத்தில் கெயில், ஐடிஎஃப்சி, அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் உயர்ந்தும், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, என்டிஎஃப்சி, பவர் கிரிட், கோல் இந்தியா நிறுவன பங்குகள் குறைந்தும் வர்த்தகமாகி வந்தன. 
 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இடையே முதலீட்டாளர்கள் ஐடி உட்பட பல துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு மேற்கொண்டதால் சந்தை அதிகரித்து காணப்பட்டது. சமீபத்தில் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் திருப்தி இல்லாத காரணத்தினால் சந்தை சரிவுடன் காணப்பட்டது. நிஃப்டியைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அதிகபட்ச உச்சத்தை எட்டிய பிறகு 1.7 சதவிகிதம் சரிவடைந்து காணப்பட்டது. எனினும் பருவமழை குறித்த டேட்டா மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையை உச்சத்தைக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.90 புள்ளிகள் உயர்ந்து 9136.40 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 85.82 புள்ளிகள் உயர்ந்து 29422.39 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
கிராஸிம் 1,147.45
பாங்க் ஆஃப் பரோடா 179.65
ஜீ எண்டர்டெயின் 533.45
அதானி போர்ட்ஸ் 332.40
கெயில் 401.75
 
விலை குறைந்த பங்குகள்
 
யெஸ் வங்கி 1,545.15
ஐசிஐசிஐ வங்கி 272.75
ஆசிஸ் வங்கி 488.00
ஐடியா செல்லுலர் 84.65
டாடா பவர் 84.15
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close