Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? 
 
அனில் ரெகோ, செபியில் பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகர் 
 
பண மதிப்பு நீக்கம், நிதித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையும், விளைவுகளையும் கொண்டு வந்து இருக்கிறது. கறுப்புப் பணத்தை களையெடுக்க இதனை நடைமுறைப்படுத்தினாலும், கூடவே சில சவால்களையும் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, முதலீட்டுப் பிரிவில் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. 
பண மதிப்பு நீக்கத்தால் நிறுவனங்களின் வருமானமும், லாபமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனால், காத்திருந்தும், கவனித்தும் பங்குச்ச ந்தையிலும், மியூச்சுவல் ஃபண்ட்டிலும் முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. வங்கி பிக்ஸட் டெபாசிட்டிற்கும் வட்டி குறைக்கப்பட்டு விட்டது.
 
இதனை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வேறு எங்கு முதலீடு செய்வது என்று யோசிக்க வைக்கிறது. 
 
முன் இருக்கும் தங்க நாட்கள் 
 
ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நேரத்தில் பாதுகாப்பான முதலீட்டுக்கான வழி தங்கத்தில் இருக்கிறது. தங்கத்தில் முதலீட்டை விரும்புவது என்பது இந்தியர்களின் ரத்தத்தோடு கலந்த ஒன்றாக இருக்கிறது என்பது வரலாற்று உண்மைகள். பண நீக்க மதிப்புக்குப் பின்னர், தங்கத்தின் விலையில் ஒரு நிலைத்தன்மை இருப்பது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பினை சுட்டிக்காட்டுகிறது. 
 
தங்கத்தின் விலையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் இருப்பதும், நீண்ட கால அளவிலும், இடைப்பட்ட கால அளவிலும் தங்கம் நல்ல வருமானத்தை தந்து கொண்டிருப்பதும் நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 
 
மத்திய அரசும் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதற்கு ஓர் அளவினை கொண்டு வர நினைப்பதும் தங்கத்தின் மதிப்பினை மேலும் கூட்டுகிறது. பொதுவாக, தங்கத்தை வாங்கி வைத்துத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. கோல்ட் ஃபண்ட்டாக மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். கோல்ட் ஃபண்ட்கள் நல்ல நிலையிலும் செயல்பட்டு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன. 
 
எதிர்காலத்திலும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு நல்ல வருமானத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. 
 
அனில் ரெகோ
எப்படி தங்கத்தில் முதலீடு செய்யலாம்? 

வழக்கமாகத் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது தங்க நகைகளை வாங்கி வைப்பது என்றுதான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது தங்கத்தின் முதலீடு என்பது மாறி வருகிறது.
 
தற்போது ஒவ்வொரு மாதமும் தனியாக ஒரு தொகையினை ஒதுக்கீடு தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதனையும் இரண்டு வகைகளில் மேற்கொள்ளலாம். ஒருவர் தங்கத்தை தனியாக வாங்கி வைக்கலாம். மற்றொரு வழி எஸ்ஐபி திட்டத்தில் கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.
 
இப்போது தனிநபர் குறிப்பிட்ட
அளவுக்குத்தான் தங்கம் தான் வாங்கி வைக்க முடியும் என்ற கட்டுப்பாடு வர இருப்பதால் கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு சிறந்த வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. இதனைப் பாதுகாப்பது குறித்தும் கவலைகொள்ள தேவையில்லை. 
 
என்ன செய்யக்கூடாது? 
 
நிலையற்ற நேரங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருவர் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். மற்ற முதலீட்டை விடத் தங்கத்தில் முதலீடு செய்வதை கண்காணிப்பது என்பது எளிது. தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதை லாபகரமாகப் பார்க்க வேண்டும்.
 
இதனைக் குறைந்த கால அளவிலும், இடைப்பட்ட கால அளவிலுமான முதலீடாகப் பார்க்க வேண்டும். கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு மெதுவாக இதர முதலீட்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பண நீக்க விளைவுகள் மறைந்து வேர் விட்டுக் கிளை பரப்புவதற்கு முன்பு தங்கத்தின் முதலீட்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
தற்போதைய நிலையில், தங்கத்தில் முதலீடு நல்ல அறுவடையினை தரும்! மகிழ்ச்சியோடு முதலீடு செய்யுங்கள். 
 
தொகுப்பு: ஞா. சக்திவேல் முருகன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close