Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஎஃப் வட்டி 8.65% ஆக நிர்ணயம் .!

 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) 2016 -17 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 % சதவிகிதமாக பிஎஃப் அறங்காவலர் குழு நிர்ணயம் செய்துள்ளதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
இபிஎஃப் வட்டி விகிதத்தை அறங்காவலர் குழு முடிவு செய்யும். ஆனால் அறங்காவலர் குழு முடிவிற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்கப்படும்பட்சத்தில் பிஎஃப் தொகைக்கான வட்டி பிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். பிஎஃப் அமைப்பு தன்னாட்சியாக செயல்படுவதால், அறங்காவலர் குழு பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளும்.
 
ஆனால் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டுக்கு 8.8 சதவிகித வட்டியை பிஎஃப் அறங்காவலர் குழு நிர்ணயம் செய்தது. நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.7 சதவிகிதமாக குறைத்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து 8.8% ஆக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது.
 
மத்திய தொழிலாளார் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா,'' இபிஎஃப் அறங்காவலர் குழு 8.65% வட்டி வழங்க முடிவெடுத்துள்ளது. 8.65% வட்டி வழங்கினாலும் கூட ரூ. 158 கோடி ரூபாய் உபரியாக இருக்கும்." என்றார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close