Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாப நோக்கில் விற்பனையால் இறக்கத்தில் இந்திய சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 103.29 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிக உச்சத்தை எட்டி இருந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃப்எம்சிஜி, பொதுத்துறை நிறுவனம், உலோகம் மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. 
 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இடையே முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை இறக்கத்துடன் முடிவடைந்தது. ஸ்மால் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் இதுவரை இல்லாத அளவில் உயர்வடைந்து காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 9119.40 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 57.09 புள்ளிகள் குறைந்து 29365.30 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பாரதி இன்ப்ராடெல் 352.85 
ரிலையன்ஸ் 1,402.50 
ஹெச்டிஎஃப்சி வங்கி 1,496.60
என்.டி.பி.சி 167.20 
டெக் மஹிந்திரா 427.65 
 
விலை குறைந்த பங்குகள்
 
சன் பார்மா 639.60 
பாங்க் ஆப் பரோடா 175.20
அதானி போர்ட்ஸ் 326.00 
ஐடிசி 274.35 
விப்ரோ 491.25

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close