Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி காலாண்டு முடிவினைப் பொறுத்தே சந்தையின் ஏற்ற, இறக்கம்!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (17.5.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை ஃபிளாட் ஆக வர்த்தகமானது. கடந்த இரண்டு நாள்களாக சந்தை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை ஃபிளாட் ஆக காணப்பட்டது. இதுமட்டுமின்றி ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டதால் இந்திய சந்தை தடுமாற்றத்துடன் காணப்பட்டது. 
 
 
இந்த நிலையில் வர்த்தகத்தின் இடையே மீண்டும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை மீண்டும் எட்டிப் பிடித்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30,692.45 புள்ளிகளும், நிஃப்டி 9,525.75 புள்ளிகளும் வரலாறு காணாத அளவில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 5.7 சதவிகிதம் வரை உயர்வடைந்துள்ளது. இது ஆசிய சந்தைகளை ஒப்பிடும்போது மிக அதிகமாகும். எனினும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவினைப் பொறுத்தே சந்தை மேலும் உயருமா அல்லது இறங்குமா என்பது இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 9525.75 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 76.17 புள்ளிகள் உயர்ந்து 30658.77 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 493.90
பாரதி ஊடுருவல் 389.90 
டாடா மோட்டார்ஸ் 449.10
ஐசிஐசிஐ வங்கி 309.75 
டாடா பவர் 85.35
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 430.85 
ஏசிசி 1,694.05
போஷ் 24,190.90
ஆம் வங்கி 1,454.65 
அதானி போர்ட்ஸ் 348.55
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close