Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தை!

 
காலை 11.10 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் புதிய உச்சத்தை மீண்டும் எட்டிப் பிடித்தது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 30,692.45 புள்ளிகளும், நிஃப்டி 9,525.75 புள்ளிகளும் வரலாறு காணாத அளவில் அதிகரித்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 5.7 சதவிகிதம் வரை உயர்வடைந்துள்ளது. இது ஆசிய சந்தைகளை ஒப்பிடும்போது மிக அதிகமாகும். சந்தையைப் பொறுத்தவரை இனி கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவினைப் பொறுத்தே சந்தை மேலும் உயருமா அல்லது இறங்குமா என்பது இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 
இந்த நிலையில் இன்று (18.5.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையினை கருத்தில் கொண்டு சர்வதேச சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச் சந்தைகளும் பாதிப்படைந்தது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222.21 புள்ளிகள் குறைவடைந்து 30,436.56 புள்ளிகளாக குறைவடைந்தது. நிஃப்டி 77 புள்ளிகள் குறைவடைந்து 9,448.75 புள்ளிகளாக சரிவடைந்தது. இந்திய சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் குறைவடைந்து காணப்படுகின்றன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி புள்ளிகள் குறைந்து 9525.75 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 76.17 புள்ளிகள் குறைந்து 30658.77 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 493.90
பாரதி ஊடுருவல் 389.90 
டாடா மோட்டார்ஸ் 449.10
ஐசிஐசிஐ வங்கி 309.75 
டாடா பவர் 85.35
 
விலை குறைந்த பங்குகள்
 
டெக் மஹிந்திரா 430.85 
ஏசிசி 1,694.05
போஷ் 24,190.90
ஆம் வங்கி 1,454.65 
அதானி போர்ட்ஸ் 348.55
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close