Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க, ஆசிய சந்தையால் சென்செக்ஸ் 222 புள்ளிகள் சரிவு!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (18.5.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையினை கருத்தில் கொண்டு சர்வதேச சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச் சந்தைகளும் பாதிப்படைந்தது. இன்றைய தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222.21 புள்ளிகள் குறைவடைந்து 30,436.56 புள்ளிகளாக குறைவடைந்தது. நிஃப்டி 77 புள்ளிகள் குறைவடைந்து 9,448.75 புள்ளிகளாக சரிவடைந்தது. இந்திய சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் குறைவடைந்து காணப்பட்டன. 
 
 
அமெரிக்க டாலர் கடந்த ஆறு மாதங்களில் இல்லத அளவாக சரிவடைந்து காணப்பட்டது. அமெரிகக் பங்குச் சந்தை கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு பலத்த சரிவைச் சந்தித்தது. எனினும் இது குறித்து பெரிதாக அச்சமடையத் தேவையில்லை என்று நிபுணர்வுகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்பட்ட பங்குச் சந்தை இன்று அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கை, ஆசிய சந்தை இறக்கம் மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 96.30 புள்ளிகள் குறைந்து 9429.45 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 223.98 புள்ளிகள் குறைந்து 30434.79 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
டிசிஎஸ் 2,536.20 
விப்ரோ 525.40 
இன்போசிஸ் 961.75
லுபின் 1,305.85 
சன் பார்மா 653.95 
 
விலை குறைந்த பங்குகள்
 
போஷ் 23,264.25 
யெஸ் வங்கி 1,401.15
கிராஸிம் 1,130.30 
அல்ட்ராடெக் சிமென்ட் 4,341.05
பார்தி இன்ப்ராடெல் 378.90

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close