Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரத்தின் இறுதி நாள் ஏற்றத்தில் இந்திய சந்தை!

 
காலை 11.15 மணி நிலவரம்
 
நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் கடந்த ஆறு மாதங்களில் இல்லத அளவாக சரிவடைந்து காணப்பட்டது. அமெரிகக் பங்குச் சந்தை கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு பலத்த சரிவைச் சந்தித்தது. எனினும் இது குறித்து பெரிதாக அச்சமடையத் தேவையில்லை என்று நிபுணர்வுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப்பட்ட பங்குச் சந்தை நேற்று அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கை, ஆசிய சந்தை இறக்கம் மற்றும் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. 
 
 
இந்த நிலையில் இன்று (19.5.17) காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் முதன் முறையாக 30,700 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. நிஃப்டி 9,500 புள்ளிகள் வரை அதிகரித்தது. ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகிதத்தை முடிவு செய்தததையொட்டி சென்செக்ஸ் மீண்டும் அதிகரித்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் நிலக்கரி உற்பத்திக்கு 11.69 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவர் கிரிட், கோல் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. இதுமட்டுமின்றி எஸ்பிஐ, ஐடிசி லிமிடெட், இந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை உயர்வடைந்து காணப்பட்டது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.75 புள்ளிகள் உயர்ந்து 9452.20 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 98.68 புள்ளிகள் உயர்ந்து 30533.47 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஐடிசி 289.65 11.75 4.23
யெஸ் வங்கி 1,433.85 32.70 2.33
ஹெச்யூஎல் 1,010.00 19.75 1.99
எஸ்பிஐ 308.40 5.45 1.80
ஐடியா செல்லுலர் 88.55 1.50 1.72
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசர் மோட்டார்ஸ் 27,830.00 
ஹிண்டால்கோ 191,10 
டிசிஎஸ் 2,498.75 
இன்போசிஸ் 948.80
ஏசியன் பெயிண்ட்ஸ் 1,136.65
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close