Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய உச்சத்தினையடுத்து ஃபிளாட் ஆன நிஃப்டி!

 
மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (19.5.17) காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வடைந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 223.98 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்வடைந்தது. சென்செக்ஸ் முதன் முறையாக 30,700 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது. நிஃப்டி 9,500 புள்ளிகள் வரை அதிகரித்தது. முக்கிய நிறுவனங்களான ஐடிசி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் போன்ற பங்குகள் உயர்வடைந்து காணப்பட்டது. 
 
 
 
இன்றைய வர்த்தகத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விகிதத்தை முடிவு செய்தததையொட்டி சென்செக்ஸ் மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் நிலக்கரி உற்பத்திக்கு 11.69 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவர் கிரிட், கோல் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாள் என்பதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை சரிவடைந்து இறுதியில் ஃபிளாட் ஆக நிறைவடைந்தது. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22.75 புள்ளிகள் உயர்ந்து 9452.20 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 98.68 புள்ளிகள் உயர்ந்து 30533.47 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
ஐடிசி 289.65 11.75 4.23
யெஸ் வங்கி 1,433.85 32.70 2.33
ஹெச்யூஎல் 1,010.00 19.75 1.99
எஸ்பிஐ 308.40 5.45 1.80
ஐடியா செல்லுலர் 88.55 1.50 1.72
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐசர் மோட்டார்ஸ் 27,830.00 
ஹிண்டால்கோ 191,10 
டிசிஎஸ் 2,498.75 
இன்போசிஸ் 948.80
ஏசியன் பெயிண்ட்ஸ் 1,136.65
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close