Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்!’’ - இன்டெக்ரேட்டட் ஶ்ரீராம் இன்ஸ்பிரேஷன்

தமிழகத்தில் பங்குச் சந்தையில் முதன்மை புரோக்கிங் நிறுவனமான இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வி.ஶ்ரீராம், தன்னுடைய வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிய புத்தகத்தைப் பற்றி சொல்கிறார்...
 
‘‘எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து என்னுடைய பிசினஸ் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது ஜிம் சி.காலின்ஸ் எழுதிய Good to Great: Why Some Companies Make the Leap... and Others Don’t என்கிற புத்தகத்தை. ஒரு நல்ல நிறுவனத்தை மகத்தான நிறுவனமாக மாற்றுவது எப்படி என்பதை பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 
 
இந்தப் புத்தகத்தை 2014ல் நிறுவன வருடாந்திர பொதுக் கூட்டத்துக்குச் செல்வதற்குமுன் படித்தேன்.  அந்தப் புத்தகத்தினால் இன்ஸ்பையர் ஆன நான், அந்தக் கூட்டத்தில் புத்தகம் சொல்லும் விஷயங்களை  ஊழியர்களுடன்  பகிர்ந்துகொண்டேன். பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் புத்தகம் சொன்ன ஏழு செயல் திட்டங்களையும் பிசினஸில் அப்படியே நடைமுறைப்படுத்தவும் செய்தேன். அதன்பிறகு பிசினஸில் மகத்தான மாற்றங்களை எனது நிறுவனம் கண்டது.
 
அந்த ஏழு செயல் திட்டங்கள் இவைதான். 
 
1. முன்னுதாரணமாக இருந்து அனைவரையும் பணிவாக வழிநடத்தி செல்லும் தலைமைப் பண்பு 
 
2. சரியான வேலைக்கு சரியான நபரை நியமிப்பது. நல்ல குழுவைக் கட்டமைப்பது. முக்கியமான விஷயங்களில் தவறான நபர்களை நியமிப்பதைத் தவிர்ப்பது. 
 
3. நிறுவனத்தின் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி வடிக்கையாளர்களின் விருப்பங்களையும், பிசினஸின் நோக்கங்களையும் புரிய வைப்பது. 
 
4. ஹெட்ஜ்ஹாக் ஃபோகஸ்: எல்லாவற்றையும் இழுத்து போட்டுக்கொள்ளாமல் குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது. நிபுணத்துவம் அடைவது. நிறுவனத்தின் வலிமையை அடையாளம் காண்பது. எதில் நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து செயல்படுத்துதல். 
 
5. ஒரு புராடக்டை தேர்வு செய்வதற்குமுன் அதன் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  
 
6. தொழில்நுட்பம்: பிசினஸின் எல்லா பிரிவுகளிலும் என்னென்ன தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால் நம்முடைய பிசினஸை பல மடங்கு அதிகமாகவும் எளிமையாகவும் செய்யலாம் என்பதைப் பார்க்க வேண்டும்.  
 
7. ஊழியர்களிடையே ஏற்படுத்தும் படிப்படியான வளர்ச்சி நல்ல முடிவுகளைக் கொடுக்கும். 
புராடக்ட்களைத் தேர்வு செய்வது முதல், விற்பனை வளர்ச்சி, பிசினஸ் வளர்ச்சி அனைத்திலும் வித்தியாசத்தைப் பார்க்க முடியும். இந்தப் புத்தகம் சொல்லும் இந்த ஏழு விஷயங்களூம் எந்த பிசினஸுக்கும் பொருந்தும். இவற்றை தனது பிசினஸில் தினமும் செயல்படுத்தி வளர்ந்து வருகிறேன்’’
என்று முடித்தார் ஶ்ரீராம்.
 
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள் இந்த புத்தகத்தைப் படிக்கலாமே!
 
- ஜெ.சரவணன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close