Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரன்ஸி மார்க்கெட்... இந்த வாரம் மதிப்பு என்னவாகும்?

 கரன்சி வர்த்தகம் ( 12.6.17 – 16.6.17) 

எம்.அரவிந்த் (www.cygnusindia.in) aravind@cygnusindia.in

 
கடந்த வார மத்தியில்  அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. இன்னும் ஒரு வட்டி அதிகரிப்பு அறிவிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பில் வரும் தகவல்கள்  குறித்த ஐயப்பாடுகள் காரணாமாக டாலர் திடீர் சரிவைக் கண்டது. அறிவிப்பு வெளியானவுடன் மீண்டும் உயரத்தொடங்கி  64.03 என்ற நிலையில் இருந்து மீண்டு 64.74 வரை உயர்ந்தது. 
 
இந்த வாரமும் டாலர் அதிக வாராந்திர உயர்வு தாழ்வு இல்லாது இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 64.66 க்கு மேலே சென்றால் 65.30 வரை செல்லாம். அதற்கு மாறாக 64.20 இலக்கை தாண்டி டாலர் சரிந்தால் 63.90 என்ற முக்கிய நிலையை அடையும். 
 
அதையும் கடந்து கீழே சென்றால் வரும் வாரங்களில் சற்று அதிக வீழ்ச்சியை அடையலாம்,
யூரோ : (17.5 பைசா உயர்வு. வார முடிவு = 71.90 ) புதனன்று பெட் அறிவிப்பு முன்னதாக வெளிநாட்டு சந்தைகளில் யூரோ உயர்ந்து . அறிவிப்பு வெளியானதும் சரிவை கண்டது.  
 
பொதுவாக, யூரோ சற்று தளர்ந்த நிலையிலே காணப்படுகிறது. வார துவக்கத்தில் சற்று உயர்ந்தாலும் மீண்டும்  71.90 நிலை நோக்கி இறங்கக்கூடும். அந்த நிலையை கடந்தால் வரும் வாரங்களில் இன்னும் சரிய வாய்ப்பு உள்ளது. 72.55 ஐ கடக்கும் வரை இந்த தளர்ந்த செயல்பாட்டை நாம் காணலாம்
 
பவுண்ட் : ( 22 பைசா உயர்வு. வார முடிவு = 82.35 ) வார துவக்கத்தில் மூடிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தற்போது பிரிட்டனில்  நிலவும் அரசியல் சூழலால் பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற நடக்கும் பேச்சுவார்த்தைகளில் வலுவாக செயலாற்ற இயலாது என்று கூறியதால் பவுண்ட் சரிவை கண்டது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.
 
இங்கிலாந்தின் பொருளாதார கொள்கை வகுக்கும் குழு வட்டி விகித உயர்வு குறித்து பங்கெடுத்த  வாக்கெடுப்பு முடிவுகள் பவுண்டிற்கு சாதகமாக அமைந்ததால் வெள்ளி மாலை 30 நிமிடங்களில் 90 காசுகள் உயர்ந்தது. எனினும் பவுண்ட் தொடர்ந்து 81.27 நோக்கி சரிவதற்கான நிலைகள் காணப்படுகிறது. 82.90 ஐ கடந்து சென்றாலே உயர வாய்ப்பு உள்ளது 
 
யென்: ( 36 பைசா சரிவு. வார முடிவு = 57.85 ) வார இறுதியில்  பேங்க் ஆப் ஜப்பான் இன் பொருளாதார கொள்கை நிலைப்பாடு காரணமாக டாலருக்கு நிகரான யெனின் விலை சரிந்தது.. யென் சற்று  தளர்ந்த நிலையிலேயே உள்ளது. 57.70 நிலைக்கு கீழே சென்றால் இன்னும் இறங்க வாய்ப்புள்ளது. 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close