Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சதமடித்தது சென்செக்ஸ்... புதிய உச்சத்தை நோக்கி நிஃப்டி!

 
காலை 11.20 மணி நிலவரம்
 
வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, காலையில் அதிகரித்து காணப்பட்ட சந்தை, வர்த்தகத்தின் இறுதியில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஃபிளாட் ஆக நிறைவடைந்தது. சந்தையில் ஐடிசி, டாடா மோட்டார்ஸ், கெயில், என்டிபிசி, லுபின், டாக்டர் ரெட்டிஸ், விப்ரோ, சிப்லா, சன் பார்மா போன்ற நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. 
 
 
இந்த நிலையில் இன்று (19.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை அதிகரித்து காணப்படுகிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக ஈடுபட்டு வருவதால் காலை வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகரித்து காணப்பட்டது. சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கும் மேலும், நிஃப்டி 40 புள்ளிகளுக்கு மேலும் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
 
சந்தையில் கேப்பிடல் குட்ஸ், ஆட்டோ, ரியால்டி மற்றும் எஃப்எம்சிஜி துறை சார்ந்த பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எம் & எம், ஐடிசி லிமிடெட், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவன பங்குகள் அதிகளவில் அதிகரித்து காணப்பட்டன. 
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.15 புள்ளிகள் உயர்ந்து 9628.20 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 161.81 புள்ளிகள் உயர்ந்து 31203.60 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
பார்தி இன்ஃப்ராடெல் 382.80 7.70 2.05
அதானி போர்ட்ஸ் 369.40 6.25 1.72
ரிலையன்ஸ் 1,411.50 22.70 1.63
டாடா ஸ்டீல் 509.90 7.95 1.58
பஜாஜ் ஆட்டோ 2,846.90 37.10 1.32
 
விலை குறைந்த பங்குகள்
 
சிப்லா 525.90 
கோல் இந்தியா 252.00
ஓஎன்ஜிசி 164.90 
இன்போசிஸ் 930.30
டாக்டர் ரெட்ஸ் லாப்ஸ் 2,660.00 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close