Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பால் குதுகலமான பங்குச் சந்தை!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இன்று (19.6.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை அதிகரித்து காணப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மத்திய அரசு ஈடுபட்டு வருவதால் காலை வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகரித்து காணப்பட்டது. சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கும் மேலும், நிஃப்டி 40 புள்ளிகளுக்கு மேலும் அதிகரித்து வர்த்தகமாகின.
 
சந்தையில் கேப்பிடல் குட்ஸ், ஆட்டோ, ரியால்டி மற்றும் எஃப்எம்சிஜி துறை சார்ந்த பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எம் & எம், ஐடிசி லிமிடெட், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவன பங்குகள் அதிகளவில் அதிகரித்தன. 
 
 
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது. ரிசர்வ் வங்கி, கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கும் 12 பெரிய கடனாளிகளுக்கு எதிரான திவால் செயல்முறையை தொடங்க ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது. இதனால் வாராக் கடன் பிரச்னை தீரும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குகளை வாங்கி குவித்ததால் சந்தை புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது.
 
இதுமட்டுமின்றி, குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்தை தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக, பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. தலித் குடும்பத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார். இதன் எதிரொலியாகவும், சர்வதேச சந்தைகள் சாதகமான வர்த்தகம் நடைபெற்றதாலும் சந்தை அதிகரித்து காணப்பட்டது.  
 
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 69.50 புள்ளிகள் உயர்ந்து 9657.55 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ்255.17 புள்ளிகள் உயர்ந்து 31311.57 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
டாடா ஸ்டீல் 519.55 17.60 3.51
அதானி துறைமுகம் 373.80 10.65 2.93
ஹிண்டால்கோ 200.85 5.60 2.87
ஐடியா செல்லுலர் 79.65 1.90 2.44
போஷ் 25,056.35 589.05 2.41
 
விலை குறைந்த பங்குகள்
 
இன்போசிஸ் 929,85 
ஐசர் மோட்டார்ஸ் 28,445.20
பிபிசிஎல் 667.15 
டாக்டர் ரெட்ஸ் லாப்ஸ் 2,657.45
யெஸ் வங்கி 1,430.95 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close