Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீடு செய்யாமல் பெரும் பணத்தைக் கையில் வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்!

 

 
இப்போது சந்தை உச்சத்தில் இருப்பதால், கூடிய விரைவில் இறங்கும். அப்போது குறைந்த விலையில் பங்குகளை வாங்கிக் கொள்ளலாம் என பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த அளவு பணத்தைக் கையில் வைத்துக் காத்திருக்கின்றன. அந்த வகையில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பணத்தைக் கையில் வைத்திருக்கின்றன என்பதைப் பார்ப்போமா?
 
எஸ்கார்ட்ஸ் லீடிங் செக்டார் ஃபண்ட் 29,68 சதவிகிதப் பணத்தைக் கையில் வைத்திருக்கிறது. (ஆனால், இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் மொத்தத் தொகையே ரூ.4.73 கோடிதான்!) எடில்வைஸ் லார்ஜ் கேப் அட்வான்டேஜ் ஃபண்ட் 24.82 சதவிகிதமும், எடில்வைஸ் ப்ரூடன்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் 23.57 சதவிகிதமும், எஸ்கார்ட்ஸ் ஹை ஈல்ட் ஈக்விட்டி ஃபண்ட் 20.89 சதவிகிதமும், பிர்லா சன்லைப் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் 20.16 சதவிகித பணத்தையும் கையில் வைத்திருக்கிறது.
 
சுமார் 10 முதல் 19% வரை பணம் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏறக்குறைய 14 இருக்கின்றன. சுமார் 7 முதல் 10% வரை பணம் வைத்திருக்கும் நிறுவனங்கள் 31 உள்ளன. 
 
எஸ்.பி.ஐ. ப்ளூசிப் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.13,942 கோடி. இதில் 8.42 சதவிகித தொகையைக் கையில் வைத்திருக்கிறது. ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவர் ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.17,304. இதில் 7.01 சதவிகிதப் பணத்தைக் கையில் வைத்திருக்கிறது.
 
ஏதேது, ஃபண்ட் மேனேஜர்கள் இவ்வளவு பணத்தைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்தால், விரைவில் சந்தை இறங்குமோ?
 
-ஏ.ஆர்.குமார்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close