Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடந்த ஓராண்டில் தவறவிட்ட பங்குகள்... சொல்கிறார் ‘ஆம்பிட்’ செளரப் முகர்ஜி!

 

சின்னதோ, பெரிதோ, நாம் செய்த தவறுகளை எப்போதுமே ஒப்புக் கொள்வதில்லை. தனிமனிதர்களே இப்படி எனில், நிறுவனங்கள் தவறவிட்ட விஷயங்களை சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா?
 
ஆனால், இந்தியாவின் முன்னணி புரோக்கிங் ஆய்வு நிறுவனமான ‘அம்பிட்’ கடந்த ஓராண்டில் தவறவிட்ட பங்குகளைப் பற்றி மனம் திறந்து சொல்லி இருக்கிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் அனுப்பிய கடிதமொன்றில் இந்த விஷயத்தைப் பற்றி சொல்லி இருக்கிறது.
 
இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. செளரப் முகர்ஜி கூறியிருப்பதாவது:
 
‘‘கடந்த ஓராண்டில் மூன்று பங்குகளைத் தவறவிட்டிருக்கிறோம். 
 
1. பஜாஜ் ஃபைனான்ஸ்: சந்தை ஆராய்ந்தறிந்து நடவடிக்கை எடுப்பதில் இந்த நிறுவனத்துக்கு உள்ள திறமை குறித்தும், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் உள்ள நிபுணத்துவம் குறித்தும் நாங்கள் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம்.
 
2. எல் அண்ட் டி: வளர்ச்சிதான் முக்கியம் என்று நினைத்த அந்த நிறுவனத்தின் அணுகுமுறையும், மூலதனத்தை சுமாராக ஒதுக்கீடு செய்ததும் எங்களுக்குப் பிடித்தமான விஷயமாக இருந்ததில்லை. ஆனால், அவர்கள் தங்கள் தவறினைத் திருத்திக் கொண்டபோது, அதை நாங்கள் கவனிக்கத் தவறிவிட்டோம்.
 
3. பிரிட்டானியா: ஒரு பிசினஸ் நீண்ட காலத்தில் நன்கு இருக்குமெனில், குறுகிய காலத்தில் அதன் ஏற்ற, இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதே இந்தப் பங்கிலிருந்து நாங்கள் கற்ற பாடம்’’.
 
இப்படி தனக்குச் சரியென்று பட்டதை மறைக்காமல் எடுத்துச் சொல்லி இருக்கிறார் செளரப் முகர்ஜி.
 
- ஏ.ஆர்.கே
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close