Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெக்னிக்கல் அனாலிசிஸ்... ''இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் செலவல்ல, முதலீடு!''

 
 சென்னையில் ஜூலை 15-16-ம் தேதி,  நாணயம் விகடன் நடத்திய இரண்டு நாள்  டெக்னிக்கல் அனாலிசிஸ் கட்டணப் பயிற்சி வகுப்பில் பல பங்குச்சந்தை வர்த்தகர்களும், வாசகர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சென்னை மட்டுமின்றி தேனி, கடலூர், சேலம், நாமக்கல்... என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்டனர். 
 
எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி வழங்கினார்.
‘‘முதலில் ஒருவர் டிரேடரா, முதலீட்டாளரா என்பதில் தெரிந்து கொள்ள வேண்டும். டே டிரேடர் என்றால் அன்றைக்கு வாங்கியதை அன்றே விற்றுவிட்டு வெளியேற வேண்டும். சுவிங் டிரேடர் என்றால் ஒரு வாரம் வரை வாங்கிய பங்குகளை வைத்துக் கொள்ளலாம். முதலீட்டாளர் என்றால், ஒரு மாதம் வைத்து, பங்குகளை விற்பனை செய்பவர்கள்... ஆக வர்த்தக முடிவுகளை சரியாக எடுக்க நீங்கள் யார் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
 
இங்கே வந்துள்ள சிலருக்கு டே டிரேடர்களாக இருக்க ஆசை இருக்கும். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை வைத்து அவர்கள் சுவிங் டிரேடர்களாகவோ அல்லது இன்வெஸ்டார்களாகவோ மாறுவதுதான், அவர்களுக்கு நல்லது.
 
டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது இருட்டில் செல்பவர்களின் கையில், டார்ச் லைட்  இருப்பது போல வழிகாட்டும். கடைசியில் நாம் எல்லோம், ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் பங்கு வர்த்தகத்தில் பத்துக்கு மூன்று நஷ்டத்தைக் கொடுக்கும். ஆக, ஏழு வர்த்தகம் லாபத்தை கொடுக்கும். இதைப் பாலப்படமாக புரிந்து கொண்டால் போதும், பங்குச்சந்தையில் ஜெயிக்க முடியும்’’ என நம்பிக்கையுடன் பயிற்சி அளித்தார் அருள்ராஜன்.
 
கடந்த ஆறு ஆண்டுகளாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், சேலத்தைச் சேர்ந்த மகதீஸ்வரன்,‘‘எனக்கு பங்குச்சந்தையில் முன்அனுபவம் இருந்தாலும், இந்த பயிற்சி வகுப்பு, தன்னம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருந்தது. அதாவது,  பயிற்சி வகுப்பில் எதை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததைவிட, எதைத் செய்யக் கூடாது என்பதைத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டது.
 
டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது, கடல் போல விரிந்து உள்ளது. ஆனால், அதில் மூழ்கி முத்து எடுக்கும் வித்தையை, இந்த இரண்டு நாள் பயிற்சி கற்றுக் கொடுத்துள்ளது. வரும் காலத்தில் வெற்றிகரமான பங்குவர்த்தகராக என்னை உருவாக்கிக் கொள்ள, பல பாதைகளை திறந்து காட்டியுள்ளது’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
 
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்தால், நஷ்டம்தான் வரும் என்ற எண்ணம் பொதுப்புத்தியில் உள்ளது. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல், பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் உண்டு. ஆனால், பங்குச்சந்தை தனக்கு கொடுத்த,  லாபத்தை தனது சந்ததியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்,                                                                                                                                                                                                                    மகதீஸ்வரன் 
 

 
பாரி என்பவர் எம்.பி.பி.எஸ் மருத்துவரான தனது மகன் அருளையும் அழைத்து வந்து இரண்டு நாள் பயிற்சியில் கலந்து கொண்டது, எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
 
பயிற்சி வகுப்பில் கடைசியில் பங்கேற்பாளார்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் விளக்கமாக பதில் அளித்தார் தி.இரா.அருள்ராஜன்,
பாரி, தனது மகன் அருள் உடன்
''இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள, செலுத்திய கட்டணம், செலவல்ல, முதலீடு...''' என எல்லோரும் சொல்லிவிட்டு திருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.
 
- ஆத்தூர் செந்தில்குமார்
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close