Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: வருமானத்துக்கு கேரண்டி உண்டா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:
வருமானத்துக்கு கேரண்டி உண்டா?
சேனா சரவணன்
 
நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் -  செல்வத்தைப் பெருக்கும் முதலீடு என்கிற தலைப்பில்  சென்னையை அடுத்த தாம்பரத்தில் விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தின. 
 
முதலில் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை விளக்கி பேசினார்.
 
அவர் முதலீட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்களான இலக்குகள், திட்டங்கள், முதலீடுகள் குறித்து விரிவாகப் பேசினார். மேலும், குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலத்துக்கு எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கி சொன்னார்.
அடுத்து பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின்  முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ். குருராஜ், .''எது நல்ல முதலீடு என்பதன் இலக்கணத்தை அறிந்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு, எளிதில் பணமாக்குதல், நல்ல வருமானம், வரிச் சேமிப்பு ஆகிய நான்கு அம்சங்களை கொண்டுள்ள முதலீடே நல்ல முதலீடாகும். இந்த அம்சங்கள்  இருக்கும் முதலீடுகளை தேர்வு செய்தால் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானத்துக்கு எந்த கேரண்டியும் கிடையாது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்?" என்றார்.  
 
முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் சிறப்புரையாற்றினார். 'அவர் எடுத்த உடனேயே தடாலடியாக ''பணக்காரன் ஆக என்ன செய்ய வேண்டும்?" என்று கூட்டத்துக்கு வந்தவர்களை பார்த்து கேட்டார். பலரும் பல பதில்களை சொல்ல,'' முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால் செல்வந்தன் ஆகலாம்" என்றவர், அது எப்படி என்பதை விளக்கி பேசினார்.  சென்செக்ஸ் 32000, நிஃப்டி 10000 தாண்டி வர்த்தகமாகிறது. இந்த நிலையில் பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக சொன்னார்.  
இறுதியாக முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர்.
 
- சி.சரவணன்
 
படங்கள் - ரவிகுமார் (மாணவ புகைப்படக்காரர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close