Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிப் பங்குகள் சரிவால் இறக்கத்தில் வர்த்தகமாகும் சந்தை!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று 03.08.17 காலை முதலே இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் ரெபோ விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலான வங்கிப் பங்குகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.

காலை 11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 138 புள்ளிகள் குறைந்து 32338 புள்ளிகள் என்ற நிலையிலும், நிஃப்டி 39.85 புள்ளிகள் குறைந்து 10041 என்ற நிலையிலும் வர்த்தகமாகின்றன.

வங்கிப் பங்குகள் விலை குறைந்ததால் பேங்க் நிஃப்டி 0.5 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கோல் இந்தியா, ஹிண்டால்கோ, பிஹெச்இஎல் ஆகிய பங்குகள் அதிகபட்ச இறக்கத்தைச் சந்தித்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close