Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாவது நாளாக இறக்கத்திலேயே தொடரும் பங்குச் சந்தை!

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இறக்கத்தின் போக்கிலேயே வர்த்தகமாகின்றன. ஆனாலும் சமீபத்தில் அடைந்த உச்சங்களான சென்செக்ஸ் 32000, நிஃப்டி 10000 என்ற நிலையிலிருந்து இறங்காமல் தக்கவைத்திருப்பது ஆறுதலான விஷயம்.

இன்று 4.8.17 காலை 12.10 மணியளவில் சென்செக்ஸ் 98.58 புள்ளிகள் குறைந்து 32139 புள்ளிகளாகவும், நிஃப்டி 13 புள்ளிகள் குறைந்து 9999 என்ற நிலையிலும் வர்த்தகமாகின்றன.

சன்பார்மா, டாக்டர் ரெட்டிஸ், லுபின், சிப்லா, அரோபிந்தோ பார்மா, அம்புஜா சிமென்ட்ஸ், பார்தி ஏர்டெல், யெஸ் பேங்க் உள்ளிட்டவை 2 சதவிகிதத்துக்கும் மேல் இறக்கத்தைச் சந்தித்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ஹெச்யுஎல், டாடா ஸ்டீல் ஆகியவை ஏற்றத்தில் உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close