Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாலர் Vs ரூபாய்... இந்த வாரம் எப்படி இருக்கும்?

டாலர் Vs  ரூபாய்...
 
இந்த வாரம் எப்படி இருக்கும்?
 
எம்.அரவிந்த், சைக்னஸ் கன்சல்டன்ஸி சர்வீஸஸ்.
சென்ற வாரம் (31.7.17 – 4.7.17)
 
இந்திய மத்திய வங்கி, மற்றும் இங்கிலாந்து மத்திய வங்கி இவற்றின் வட்டி விகித அறிவிப்புகள் சென்ற வாரம் அனைவர் கவனத்தை கவர்ந்த நிகழ்வுகள். 
 
இந்திய மத்திய வங்கி 0.25% தான் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கருத்து பரவலாக இருந்ததால், ரூபாய் மதிப்பில் எந்த ஒரு பெரிய தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்திய கடன் பத்திர சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள்  தொடர்ந்து முதலீடு செய்து வருவதால்,  ரூபாயின் மதிப்பு 2 ஆண்டுகள் காணாத அளவிற்கு  வார மத்தியில் உயர்ந்தது.
 
என்றாலும் அமெரிக்காவில் வெள்ளியன்று வெளியான ஜூலை மாத வேலைவாய்ப்பு  குறித்த தரவு சிறப்பாக இருந்ததால் டாலர் சர்வதேச சந்தையில் மீட்சியை கண்டது. அதே நாளில் யூரோ மதிப்பு சரிவை கண்டது. வார இறுதியில் டாலர் 63.58 நிலையை அடைந்தது. 
 
இங்கிலாந்தில் பண வீக்க நிலைமை 2.9% இல் இருந்து 2.6% ஆக குறைந்ததாலும் , 2017 ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி முன்பு எதிர்பார்த்த 1.9% இல் இருந்து 1.7% ஆக குறையும் என்று கணிக்கப்படுவதாலும், முன்பு எதிர்பார்த்ததுபோல இந்த ஆண்டு வட்டி விகித உயர்வு இருக்காது என்று இங்கிலாந்து மத்திய வங்கி அறிவித்தது, பவுண்டிற்கு ஒரு தோய்வை ஏற்படுத்தியுள்ளது.
 
வார துவக்கத்தில் ஏற்றத்துடன் இருந்த யூரோ வெள்ளியன்று சரிவடைந்தது.  அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் மறைமுக தலையீடு இருந்ததா என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்படுவதால் தொடர்ந்து 3 நாட்கள் யென்-டாலர் உயர்வடைந்தது. (டாலர் வீழ்ச்சி). 
 
இந்த வாரம் (7.8.17 – 11.8.17)
 
இன்று டாலர் 63.65 இல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது. சென்ற வாரஇறுதி மீட்சியின் தொடர்ச்சியாக வார துவக்கத்தில் டாலர் சற்று மேல்நோக்கி சென்று 63.90 – 63.50, 63.90 – 63.20 என்ற நிலைகளுக்குள் இந்த வாரம் வர்த்தகமாகலாம்.
 
யூரோ, பவுண்ட், யென் இவை மூன்றும் சற்று தொய்வுடனே காணப்படுகின்றன. 
 
இன்று யூரோ 75.09 இல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது. 74.80 – 75.50 என்ற நிலைகளுக்குள் இந்த வாரம் வர்த்தகமாகலாம்
 
இன்று பவுண்ட் 83.11 இல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது. 82.82 – 83.50 என்ற நிலைகளுக்குள் இந்த வாரம் வர்த்தகமாகலாம்
 
இன்று யென் 57.49 இல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது. 57.00 – 58.10 என்ற நிலைகளுக்குள் இந்த வாரம் வர்த்தகமாகலாம்
.. 
  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close