Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017-18 நிதி ஆண்டு ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் வரிச் சலுகை ரத்து..

 
2017-18 நிதி ஆண்டு ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் வரிச் சலுகை ரத்து
 
 - சேனா சரவணன்
 
கடந்த 2012-13 ம் ஆண்டுக்கான மத்திய  பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டம் மிகுந்த ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.  ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme (RGESS) ) அறிவிக்கப்பட்டது.
 
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, 80 சிக்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச்சலுகை அளிக்கப்பட்டது. வருமான வரிச் சலுகையை பெற ஆண்டு வருமானம் 10 லட்ச ரூபாய்க்கு  குறைவாக இருக்க வேண்டும் என முதலில் கொண்டு வரப்பட்டது. பிறகு இது ரூ. 12 லட்சம் அதிகரிக்கப்பட்டது. 
 
 
வரிச் சலுகை பெற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.  நிறுவனப் பங்குகளில் முதல் முறையாக முதலீடு செய்பவராக இருக்க வேண்டும். மேலும், வரிச் சலுகைக்காக குறிப்பிட்ட பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும். வரி சலுகைக்காக முதலீடு செய்யப்படும்
பங்குகளை மொத்தம் மூன்று ஆண்டுகள்  இருப்பு வைத்திருக்க வேண்டும்.  இதிலும் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டது. முதல் ஆண்டில் பங்குகளை விற்பனை செய்ய முடியாது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், விற்காலம்.  அதேநேரத்தில், ஏற்கெனவெ முதலீடு செய்த  தொகைக்கு சமமாக தகுதிவாய்ந்த பங்குகளில் மூன்றாண்டு முடிவுக்குள் முதலீடு செய்துவிட  வேண்டும்.
 
ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால், அதிகபட்சமாக 50,000 ரூபாய்தான் வரிச் சலுகைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவும்  இதில் 50% தொகைக்கு (ரூ.25,000) தான் வரிச் சலுகை. இதை ஒருவரின் ஆண்டு வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம்.
 
ஒரு நிதி ஆண்டில் 50,000 ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை என்றால், ஓராண்டில் பகுதி தொகையும் அடுத்த ஆண்டில் மீதித் தொகையையும் முதலீடு செய்யலாம் என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. முதலீட்டு தொகை பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு  தொடர்ந்து ஆண்டுக்கு ரூ. 50,000 முதலீடு செய்து, அதில் பாதிக்கு வரிச் சலுகை பெறலாம் என மாற்றப்பட்டது. இவ்வளவு நிபந்தனைகளால் இதில் அதிகம் பேர் முதலீடு செய்ய முன்வரவில்லை.   
 
 ராஜீவ் ராஜீவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி சலுகை 2017-18 ம் நிதி ஆண்டு முதல் ரத்து  செய்யப்பட்டுள்ளது.  இந்த வரி சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close