Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிந்தனைகளின் உண்மையான சக்தியை உணர்வது எப்படி?

நாளுக்கு நாள் நம்முடைய வாழ்க்கை அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் என்னதான் மனிதன் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவை அனைத்துக்கும் ஆதாரமானது மனித மூளைதான். அதற்குள்ளிருந்து உதிக்கும் சிந்தனைகள்தான் உண்மையான யுகமாற்றத்தின் ஆணிவேர். அத்தகைய சிந்தனைகளின் உண்மையான சக்தியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

பாப்லோ பிகாசோ சொல்லியிருக்கிறார். “கணினிகள் பயனற்றது. அதனால் நமக்கு நாம் உருவாக்கிய பதில்களை மட்டுமே தர இயலும்”. ஆம் உண்மைதான் அவற்றால் எதையும் புதிதாக உருவாக்க முடியாது. எவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்தாலும் அவற்றின் தலைவிதியைத் தீர்மானிப்பது நம்முடைய மனித மூளைதான்.

அதிலிருந்து உதிக்கும் சிந்தனைகளின் உண்மையான சக்தியை உணர்வது எப்படி என்பதை 20 வருடங்களுக்கும் மேல் கார்ப்பரேட் உலகத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஸ்ரீதர் "Unlock The Real Power Of Ideation" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் சொல்லும் சில விஷயங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

எவ்வளவுதான் திறமையான நபராக இருந்தாலும் பலருக்கு வித்தியாசமாகச் சிந்திப்பது என்பது கைகூடுவதில்லை. எத்தனை கூட்டங்களில் கலந்துகொண்டாலும் எவ்வளவு ஊக்கமளிக்கும் பேச்சுகளைக் கேட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனைகளைச் செயல்களாக்குபவர்கள்தான் உலகை மாற்றியவர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

சிந்தனைகளை எப்படி செயல்களாக்கி வெற்றியடைவது என்பதை இந்தப் புத்தகத்தில் படிப்படியாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அவர் நம்முடைய சிந்தனைகளின் உண்மையான சக்தியை வெளிக்கொணர்வதற்கு ஏழு முக்கிய விஷயங்களையும் இதில் பட்டியலிட்டுள்ளார். மேலும் ஒரு பிர்சனையை அணுகும் இரு வேறு அணுகுமுறைகளையும் குறிப்பிடுகிறார். இவை ஒரு பிரச்னைக்கான தீர்வை தேடுபவர்கள் அதற்கான சிந்தனையை எப்படி பெறுவது என்பதை சொல்கின்றன.

அதேபோல் அந்த சிந்தனையை செயலாக மாற்றும் முயற்சியில் இயங்கும் குழுவினருக்கும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. எந்தவொரு பிரச்னையையும் 5W+1H (Who, What When, Where, Why and How ) விதிப்படி அணுக வேண்டும். அப்படி அணுகும்போது அதற்கான தீர்வு புலப்படும் என்று சொல்லும் இப்புத்தகம் அதன் வழிமுறைகளையும் விளக்குகிறது.

இந்தப் புத்தகம் கார்ப்பரேட் மேஜேனர்களின், தொழில் முனைவோர்களின் வழிகாட்டியாக விளங்கும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close