Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மல்டி பேக்கர்’ பங்குகளை அறிந்து கொண்டோம்!

நாணயம் விகடன் நடத்தும் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பில், சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், மதுரை, சேலம் ... என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் வந்து கலந்துகொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் இந்தப் பயிற்சி வகுப்பினைச் சிறப்பாக நடத்தினார்.
 
 
‘‘பங்குச்சந்தை என்பது எல்லாத் தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் துறை. ஆனால், அதை முறையாகக் கற்றுக்கொண்டு உள்ளே சென்றால்தான், சேதாரம் இல்லாமல், செழிப்படைய முடியும். 
 
மியூச்சுவல் ஃபண்டைக் காட்டிலும், பங்குச் சந்தை பக்கம் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவது என்பது, நமது காரை ஓட்ட டிரைவர் வைத்துக் கொள்வது போல. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, நாமே காரை ஓட்டுவதற்குச் சமம். ஆக, நாமே கார் ஓட்ட வேண்டும் என்றால், கார் குறித்த அடிப்படைத் தகவல்களும், வண்டி ஓட்டுவதற்கான பயிற்சியும் தேவை. அதைத்தான் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பில் பார்க்கப் போகிறோம். 
 
முதலில் நமக்கான போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஃபிக்சட் டெபாசிட்டில் பணம் இருந்தால், ஆண்டுக்கு 7% வருமானம் கிடைக்கும், தங்கத்தில் முதலீடு செய்தால் 12% கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 15-20% வரை வருமானம் கிடைக்கும். 
 
இதை மையாகக் கொண்டு உங்களது போர்ட்ஃபோலியோவை அமைத்துக் கொள்ளவும். பங்குச்சந்தை பற்றிய தவறான தகவல்களும் வெளியில் உலாவிக் கொண்டுள்ளன. அதாவது, பங்குச்சந்தையில் காலையில் பணத்தை முதலீடு செய்து, மாலையில் லாபம் எடுக்கும் இடம் என்று சொல்கிறார்கள். இதை நம்பி வந்து பணத்தைப் போட்டு இழந்தவர்கள்தான் அதிகம். 
 
பங்குச்சந்தையில் நின்று நிதானமாக முதலீடு செய்பவர்களுக்குத்தான் லாபம் கிடைத்து வருகிறது. அதுவும் நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் எடுக்க முடியும்...’’ எனப் பல்வேறு உதாரணங்களைச் சொல்லிய அருள்ராஜன், இணையத்தில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் செய்ய உதவும், தளங்கள் குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். 
 
 
வேடந்தாங்கல் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். அருள் என்பவரும் பயிற்சியில் பங்கு கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்தபோது, ‘‘இப்போது சிறிய நிறுவனமாக உள்ளவர்கள், வரும் காலத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளதை அறிந்து கொண்டோம். சுருக்கமாகச் சொல்வது என்றால், பல மடங்கு லாபம் தரும் ‘மல்டி பேக்கர்’ பங்குகள்! கண்டுபிடிக்கும் சூட்சுமங்களைக் கற்றுக் கொண்டோம்’’ என்றார். 
 
 
பெங்களூருவிலிருந்து வந்திருந்த வாணி என்பவர், ‘‘பங்குச்சந்தை சம்பந்தமான அடிப்படை தகவல்களை அறிந்து கொண்டேன். என்னைப் போன்ற ஆரம்பக் கால முதலீட்டாளர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தது’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 
 
- பொன்.செந்தில்குமார் 
படங்கள்:பிரியங்கா.ப

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close