Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பண வீக்க விகிதம் குறைவு: ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா?

மொத்த விலை குறியீடு அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் கடந்த 41 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரலில் 4.89 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இது முந்தைய மார்ச் மாதத்தில் 5.96% ஆகவும், சென்ற 2012 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 7.50 % ஆகவும் இருந்தது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதமும் 9.39 % ஆக குறைந்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் அதன் நிதி கொள்கை ஆய்வு அறிக்கையை வெளியிடும்போது முக்கிய கடன்களுக்கான வட்டியை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.பி.ஐ.  நடப்பு ஆண்டில் இதுவரை இந்த முக்கிய வட்டி விகிதத்தை 3 முறை குறைத்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ