Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் துறை: சொத்து மதிப்பு ரூ.8.26 லட்சம் கோடியாக உயர்வு ..!

இந்தியாவிலுள்ள 43 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு,  ஏப்ரல் மாதத்தில் , இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 18 சதவிகிதம் அதிகரித்து ரூ.8.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இத்தகவலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் கடன் சார்ந்த திட்டங்கள் ஈர்த்த முதலீடு ரூ.20,200 கோடியாக உள்ளது.  இந்த திட்டங்களுக்காக நிர்வகிக்கப்படும் சொத்துமதிப்பு 35 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து ரூ.4.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  இத்திட்டங்களின் சொத்துமதிப்பு மொத்த சொத்து மதிப்பில் 51 சதவிகிதமாகும்.


பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்களுக்காக நிர்வகிக்கப்படும் சொத்துமதிப்பு 3.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.1.79 லட்சம் கோடியாக உயர்ந்தது.  ஏப்ரல் மாதத்தில்  இந்த திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் ரூ.300 கோடியை விலக்கியுள்ள நிலையிலும் சொத்துமதிப்பு அதிகரித்துள்ளது.
 

ஏப்ரல் மாதத்தில் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீட்டாளர்கள் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள யூனிட்களை விற்று உள்ளனர்.  மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் முறையே ரூ.87 கோடி மற்றும் ரூ.8 கோடி மதிப்புள்ள யூனிட்களை விற்றிருக்கிறார்கள்.  தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close