Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்தில் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைவு!

தங்கத்தில் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைவு!

இன்று எட்டு கிராம் தங்கம் சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. அட்சய திருதியைக்கு முன்பு வேகமாக விலை ஏற்றம் கண்ட தங்கத்தின் விலை அதன் பிறகு தொடர்ந்து இறக்கத்தில் இருந்து வருகிறது.

சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறும் போது,‘ இப்போது தங்கத்தின் விலை இறங்கி வருவதற்கு பிரத்யேகமான காரணம் எதுவும் இல்லை. ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்னும் 100 ரூபாய் குறையும் என்கிற நிலை காணப்படுகிறது. காரணம், மக்கள் தங்கம் இன்னும் விலை குறையும் என்கிற காத்திருப்பில் தங்கம் வாங்க முன் வரவில்லை என்பதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால், தங்கம் விலை இறங்கி வருகிறது.’’

விலை இறங்கினாலும் சரி ஏற்றத்தில் இருந்தாலும் சரி மக்களின் தங்கத்தின் மீதான மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ