Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் புள்ளிகள் 20000க்கு கீழே இறங்கியது..!


ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை நேற்றும் இன்றும் தடாலடியாக இறங்க ஆரம்பித்துள்ளது. ஜப்பான் பாண்ட் வருமானம் வீழ்ச்சி மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தை மந்தமாக தொடங்கியது போன்ற காரணங்களால் இந்தியச் சந்தை வேகமாக இறங்க ஆரம்பித்துள்ளது.


குறிப்பாக ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் கூட்ஸ், பவர் துறை நிறுவனப் பங்குகளின் விலை அதிகமாக இறங்கி இருக்கின்றன,

டி.எல்.எஃப்.பங்கின் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு இறங்கி காணப்பட்டது. இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு, ஒரு டாலருக்கு 55.84 ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 8 மாதத்தில் மிக குறைவான மதிப்பு.  

இன்று காலை 11 .10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் புள்ளிகள் 241 இறங்கி 19820 ஆக காணப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ