Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக் கடன்களுக்கும் காப்பீடு!!

மற்ற வகை கடன்களுக்கு காப்பீடு கொடுப்பதுபோல் கல்விக் கடன்களுக்கும் காப்பீடு கொடுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. கல்விக் கடன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து முழுத் தொகையையும் வங்கி பெற்றுக் கொள்ளும் விதமாக இந்த இன்ஷூரன்ஸ் இருக்கும்.   

கடன் தொகையில் 2- 3 சதவிகிதம் வரை இந்த காப்பீடு தொகை இருக்கும். வங்கிகள் கடன்களுடன் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும் வழங்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவை என்றால் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் கிடையாது.  

 

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 5,510  ரூபாய் கல்விக் கடன் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. 2011 -2012 ம் ஆண்டில் 4.5 சதவிகிதம் வரை இந்த கல்விக் கடனில் வசூலாகாத கடனாக இருந்துள்ளது.   ஹெச்.எஸ்.பி.சி. ஓ.பி.சி.,  கல்விக் கடனுக்கான டேர்ம் பாலிசியை அறிமுகப்படுத்தவுள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து வருவது மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போதே வேலைக்கு எடுப்பது உள்ளிட்டவைகள் சமீப ஆண்டுகளில் குறைந்து வருவதால் கல்விக்கடன் கொடுப்பதும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.   எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் கல்விக்கடன் கொடுப்பதால் இதில் இருக்கும் ரிஸ்கை தவிர்க்க இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

கல்விக் கடனுடன் கூடிய டேர்ம் பாலிசியை ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.   கல்விக் கடன் வாங்குபவர்கள் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் முக்கியத்துவத்தை அறிந்து முறையாக பாலிசித் தொகையை செலுத்தினால் மட்டுமே இந்த பாலிசி வெற்றியடையும்.   

-பானுமதி அருணாசலம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP