Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரெடிட் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு..!


கிரெடிட் கார்டு எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளாக தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், சென்ற 2012- 13 ஆம் நிதி ஆண்டில் அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

கடந்த 2012-13 ம் நிதி ஆண்டில் 1.96 கோடி கிரெடிட் கார்டுகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அளித்துள்ளதாக பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இது முந்தைய ஆண்டைவிட 11% அதிகம். அதிகபட்சமாக 2007-08 ம் ஆண்டில் 2.75 கோடி கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது 2011-12 ம் ஆண்டில் பாதியாக குறைந்தது.

நகரப் பகுதிகளில் பெரும்பாலோர் கிரெடிட் கார்டு பெற்றிருக்கிறார்கள். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்போது சிறுநகரங்களில் வாடிக்கையாளர்களைப் பெற ஆர்வம் காட்டி வருவதாக ஆர்.பி.ஐ. புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP