Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிகர முதலீடு ரூ.76,539 கோடி ..!

கடந்த 2012-13 ம் நிதி ஆண்டில் பல்வேறு திட்டங்களின் மூலமாக இந்தியாவிலுள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் மேற்கொண்ட  நிகர முதலீடு ரூ.76,539 கோடியாக அதிகரித்து உள்ளது.

 முந்தைய 2010-11 மற்றும் 2011-12 ஆம் நிதி ஆண்டுகளில் முறையே ரூ.49,000 கோடி மற்றும் ரூ.22,000 கோடி முதலீடு விலக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பங்கு வர்த்தகம் மேம்பட்டது. கடந்த 2012-13 ம் நிதி ஆண்டில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 8% அதிகரித்தது.

 

கடன் சார்ந்த திட்டஙக்ளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உயர்ந்ததாலும், பங்கு வர்த்தகம் நன்றாக இருந்ததாலும், கடந்த நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் தி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.7.01 லட்சம் கோடியாக அதிகரித்தது. நிகர முதலீடு ரூ.76,539 கோடியாக உள்ளது.

கடந்த 2009-10 ஆம் நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு ரூ.83,000 கோடியாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் 2010-11 மற்றும் 2011-12 ம் நிதி ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீட்டை விட விலக்கப்பட்ட தொகை அதிகமாக இருந்தது. கடந்த 2012-13ம் நிதி ஆண்டில் முதலீடு செய்த தொகை அதிகரித்துள்ளது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP