Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியல் எஸ்டேட் துறை ஒழுங்கு முறை ஆணையம்: மத்திய மந்திரி சபை ஒப்புதல்..


ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களை தரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய மசோதாவுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

* குறிப்பிட்ட தேதியில் திட்டத்தை முடித்து கொடுக்க வேண்டும்.

* புரோக்கர்களுக்கு உரிமம்

* பிராஜக்ட் தாமதமானால் வாங்கிய தொகையை திருப்பி கொடுக்கவும் இந்த மசோதா வழி செய்யும்.

* ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பின்னரே கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

* கட்டுமானப் பணி முடிந்த பின்னரே வீடு வாங்குபவர்களிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டும்.

* நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும், திட்ட அனுமதி விவரங்களை இணையதளம் தளம் வழி அறிவிக்க வேண்டும். 

* விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு திட்டச் செலவில் 10% அபராதம் விதிக்கப்படும்.

* அடிக்கடி தவறு செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

இதற்கான சட்ட மசோதா வரும் குளிர் கால கூட்டத் தொடரான ஆகஸ்ட் மாதத்தில் கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா 2007 ம் ஆண்டே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால், மத்திய அமைச்சக்ம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக இந்த சட்ட மசோதா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP