Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் புகார்கள்!


டிவிடெண்ட் காலதாமதமாக வழங்குவது, யூனிட்களை வாங்குவது, விற்பது தொடர்பான ரசீதுகளை முறையாக தராமல் இருப்பது, முதலீட்டாளர்கள் குறித்த விவரங்களை தவறாக குறிப்பிடுவது, குறிப்பிட்ட திட்டங்களில் முதலீட்டாளர்களை மாற்றச் சொல்லும் போது முன்னறிவிப்பில்லாமல் அதிக கட்டணத்தை வசூலிப்பது தொடர்பான புகார்கள் முதலீட்டாளர்களிடமிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு வருகின்றன.

இந்த புகார்கள் பதிவாவதை வைத்து ஆம்ஃபி அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்திருக்கிறது. இதில் நாட்டின் நான்கு பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன்லைஃப், யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களின் புகார் எண்ணிக்கை சென்ற நிதி ஆண்டு 2012&13&ல் இருந்ததை விட நடப்பு நிதி ஆண்டில் 20% (புகார்களின் எண்ணிக்கை 11,792) குறைந்துள்ளது.

இதில் முதல் இடத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட். இந்த நிறுவனத்தில் மட்டும் 47% புகார்களும், அடுத்ததாக ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் 42% புகார்களும் குறைந்துள்ளன. ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் மட்டும் புகார்களின் எண்ணிக்கை சென்ன நிதி ஆண்டை விட நடப்பு நிதி ஆண்டில் 35% அதிகரித்துள்ளது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP