Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ்: பிரீமியம் 19% அதிகரிப்பு!!

தனியார் ஃலைப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ஏப்ரல் மாதத்தில் 19 சதவிகிதம் அதிகரித்தது. இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 1,334 கோடி ரூபாய் பிரீமியம் வசூலாகியுள்ளது. இதுவே சென்ற வருடம் இதே மாதத்தில் 1,125 கோடி ரூபாய் வசூலானது.

தனியார் நிறுவனங்களில் எஸ்.பி.. ஃலைப், ஹெச்.டி.எஃப்.சி. ஸ்டாண்டர்டு, மாக்ஸ் லைஃப் மற்றும் ரிலையன்ஸ் ஃலைப் ஆகியவை  பிரீமியம் வசூலில் முன்னிலையில் உள்ளன,. இதில் வங்கிகளுடன் இணைந்து இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பதில் தவ்னியார் வங்கிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

 

எஸ்.பி.. ஃலைப் நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 65 சதவிகிதம் அதிகரித்து 285 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற வருடம் இதே மாதத்தில் 173 கோடி ரூபாயாக இருந்தது. ஹெச்.டி.எஃப். சி. லைஃப் நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 44 சதவிகிதம் அதிகரித்து 160 கோடி ரூபாயாக உள்ளது. சென்ற வருடம் 114 கோடி ரூபாயாக இருந்தது.

 

.சி..சி.. புரூடென்ஷியல் பிரீமியம் 39 சதவிகிதம் குறைந்துள்ளது. சென்ற வருடம் 169 கோடி ரூபாயாக இருந்தது தற்போது 102 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பிர்லா சன் லைஃப் 37 சதவிகிதமும், மெட் லைஃப்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் 44 சதவிகிதமும் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளன. இத்தகவலை .ஆர்.டி. தெரிவித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ