Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறுகிய கால முதலீடு: இன்கம் ஃபண்டுகளை கவனியுங்கள்..

- அமன்தீப் சோப்ரா,

ஃபிக்ஸட் இன்கம் - குரூப் தலைவர் மற்றும் ஹெட்யூ.டி.. .எம்.சி.

(Amandeep Chopra, Group President & Head, Fixed Income, UTI AMC)

சில வருடங்களுக்கு முன்னால் பணவீக்கம் அதிகரிப்பு, நிதி பற்றாக்குறை, அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் ஆர்.பி.. வட்டி விகிதங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த ரிஸ்க் நடவடிக்கைகள் படிப்படியாக குறைந்து 2013-ல் வளர்ச்சி காணத் தொடங்கியது.

 

வட்டி விகிதங்கள் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடனுக்கான வட்டி குறைவு, கடன் வாங்கும் செலவினங்கள் குறைவு உள்ளிட்ட விஷயங்கள் கடன்வாங்குபவர்களுக்கு சாதகமாக அமைந்தது. மொத்த விற்பனை விலை குறியீடு கடந்த வருடத்தில் 8 சதவிகிதமாக இருந்தது . 2013 ஏப்ரல் மாதத்தில் 4.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. நுகர்வோர் விலை குறியீடு 10 சதவிகிதத்திலிருந்து 9.4 சதவிகிதமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உள்ளது.

பருவமழை பொய்ததால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து உணவு பணாவீக்கமும் அதிகரித்தது. கச்சா எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பால் கமாடிட்டி பொருட்களின் விலை அதிகரித்தது.

2014 நிதியாண்டில் சராசரியான பணவீக்கம் 5.5 சதவிகிதமாக இருக்கும் என ஆர்.பி.. கணித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி சற்று முன்னேற துவங்கியுள்ளது. முதலீடு மற்றும் தேவையின் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டாவது காலாண்டில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைவதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது.

உலக பொருளாதார சூழ்நிலைகளை கொண்டு பார்க்கும்போது வட்டி விகிதங்கள் மூன்று காரணிகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆர்.பி..-யின் வளர்ச்சி குறித்த அனுமானம், பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகள் வட்டி விகிதங்களை தீர்மானிக்கிறது. ரூபாயின் மதிப்பு மற்றும் கமாடிட்டி சுழற்சி போர்ட்ஃபோலியோவில் பிரதிபலிப்பை உண்டு செய்யும்.

அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஃபெடரல் வங்கியின் நடவடிக்கைகள் இந்தியாவில் பிரதிபலிப்பை உண்டாக்கும். வட்டி விகிதங்கள் குறைப்பு நடவடிக்கைகளில் ஆர்.பி.. ஈடுபடுவது சிரமமான விஷயம்.

குறுகிய காலத்தில் பார்க்கும் போது ஜூன் மாதத்தில் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம். மேலும், ரொக்க கையிருப்பு விகிதம் (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) குறைக்கும் நடவடிக்கைகளில் ஆர்.பி.. ஈடுபடும். மே 24 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் வங்கிகள் ஆர்.பி..-யிடமிருந்து 96,000 கோடி ரூபாய் தினமும் சராசரியாக ரெப்போ விகிதத்தில் கடன் வாங்குகின்றன.

நிதி பற்றாக்குறை போன்ற காரணத்தால் ஆர்.பி.. சில நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் குறித்த நடவடிக்கைகள் மற்றும் உலக பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக மியூச்ச்சுவல் ஃபண்டுகள் மற்ற வகை நிலையான முதலீடுகளை விட நல்ல வருமானம் கொடுக்கும்.

நடுத்தர கால முதலீட்டில் பார்க்கும்போது குறுகிய கால மற்றும் நீண்ட கால ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் ஷார்ட் டேர்ம் ஃபுளோட்டிங் ஃபண்டுகள் இன்னும் சில மாதங்களில் நல்ல வருமானம் கொடுக்கும்.

அடுத்து வரும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் குறுகிய கால இன்ம்கம் ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுக்கும்.

பெஸ்ட் ஆஃப் லக்...!

English Summary :

 

 

Short-term funds are preferable

By Amandeep Chopra, Group President & Head, Fixed Income, UTI AMC

Suggest a mix of short-term and long-term funds over a medium-term investment horizon, with a higher weightage to the short-term funds given the volatility expected in the next few months.

In ultra-short term category, we continue to recommend floating- rate funds to our investors. Short Term Income funds look attractive on a time horizon of 6 - 9 months

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ