Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 5 கோடி சதுர அடி அலுவலக இடம் காலி..!

இந்தியாவில் சுமார் ஐந்து கோடி சதுர அடி அலுவலக இடம் காலியாக இருப்பதாக ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசேல் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போதிருக்கும் தேவையோ மூன்று கோடி சதுர அடி தான் எனவும் தெரிய வந்துள்ளது.

பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் ஆய்வு செய்து இந்த தகவலை தந்துள்ளது.

நாட்டின் மொத்த ரியல் எஸ்டேட் கட்டுமானம் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் 76 சதவிகிதம் வீட்டு உபயோகத்திற்கும், மீதமுள்ளது கமர்சியல் பயன்பாட்டிற்காகவும் உள்ளது. இதில் 55 சதவிகிதம் ஐ.டி. துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. பெங்களூர் நகரத்தை தவிர மற்ற நகரங்களில் அலுவலக பயன்பாட்டிற்கான வாடகை அதிகரித்தே காணப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ