Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் லைஃப் இன்ஷூரன்ஸ்: முதல் லாபம் ஈட்டியது...!

 ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் லைஃப் இன்ஷூரன்ஸ், ஐந்து வருடங்களில் தனது பிரேக் ஈவனை எட்டியுள்ளது. அதாவது முதன் முதலாக 9.24 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:



மார்ச் 2008 இல்செயல்பாடுகளை தொடங்கிய ஐ.டி.பி.ஐ ஃபெடரல், தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே பிரேக் ஈவனை கண்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனை. நிறுவனத்தின் செயல் திட்டமாக லாபத்துடன் கூடிய வளார்ச்சியை கண்டுள்ளோம். மேலும் தொழில்துறையின் எதிர்மறை வளர்ச்சியான 15 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் எங்களது புதிய வர்த்தக பிரீமியம் 23 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பான்மையான நிறுவனங்கள் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துவரும் இந்த காலகட்டத்தில் எங்களது வளர்ச்சி சதவிகிதம் தொழில்துறையின் சாதனை.
 
ஐ.டி.பி.ஐ. ஃபெடரல் லைஃப் இன்ஷூரன்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலருமான ஜி.வி. நாகேஸ்வர ராவ்,'' நிறுவனம்அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான அளவு சால்வன்சி விகிதத்தை கொண்டுள்ளது. நிறுவனம் லாபம் ஈட்டும் நிலையை அடைந்துள்ளதால் இதற்கு மேல் மூலதன அதிகரிப்பு தேவைப்படாது." என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ