Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாஃபே : விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி திட்டம்...!

*  டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் நிறுவனம், பயிற்சியாளர்களுக்கு
பயிற்சியளிக்கவுள்ளது


* வேளாண் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் திறனுக்கான முக்கிய அம்சமாக இயந்திரமயமாக்கல்
திகழ்கிறது


 வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்த அறிவினை பரப்பும் வகையில்,
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய டிராக்டர் நிறுவனமான டாஃபே, கார்ப்பரேட்
கருத்தாக்கமான “கல்டிவேட்டிங் தி வேர்ல்டு (‘‘Cultivating the World’) என்பதையொட்டி,
“கல்டிவேட்டிங் இந்தியா” ((‘Cultivating India’) என்னும் தேசிய அளவிலான பயிற்சி திட்டத்தினை
அறிவித்துள்ளது.

டாஃபே ஒரு விரிவான பயிற்சி திட்டத்தினை வகுத்துள்ளது மற்றும் அதன்படி, பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த வேளாண்-விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்துறை அலுவலர்களுக்கு,
நிறுவனத்தின் வேளாண் ஆராய்ச்சி மையமான J ஃபார்ம் - ல் (J Farm) பயிற்சி அளிக்கப்படும். 1964 ம்
ஆண்டு, அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் நிறுவனர் எஸ். அனந்தராமகிருஷ்ணனின்
நினைவாக, விவசாயிகள் அவர்களது உற்பத்தித் திறன் மற்றும் வருவாயை மேம்படுத்தத்தக்க
அமலாக்க ஆராய்ச்சியில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட J ஃபார்ம் நிறுவப்பட்டது.



 

வேளாண் மேலாண்மை மற்றும் சிறப்பான வேளாண் பழக்கங்களுடன் தமிழக விவசாயிகளுக்கு
ஆதரவளித்துவந்ததுடன், விவசாயத்திற்குத் தேவையான தரமான விதைகளையும் வழங்கி வந்த
இந்நிறுவனம், தனது செயல்பாடுகளை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த தற்பொழுது திட்டமிட்டுள்ளது.

டாஃபே நிறுவனத்தின், முதுநிலை வேளாண்-பொருளாதார நிபுணர் டாக்டர். கே.ஸ்ரீனிவாசன்,
“மேகாலயா மாநில வேளாண்துறையைச் சேர்ந்த முதல் குழுவினர் ஐந்து நாள் பயிற்சி முகாமை
நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு, வேளாண் வழக்கங்கள் மற்றும் பொருத்தமான உழவு
இயந்திரங்கள், டிராக்டர்கள் பயன்பாடு மற்றும் மலை சார்ந்த பிரதேசங்களில் அதன் செயல்திறன்
ஆகியவைகளுடன், மோல்டு போர்டு புளோ, ரோட்டரி டில்லர், கல்டிவேட்டர், லெவலர், கேஜ் வீல், சீட்
டிரில், த்ரெஷர், ஸ்பிரேயர், ரீப்பர் மற்றும் ஃபர்ரோ மேக்கர் போன்றவைகள் குறித்தும்
பயிற்சி அளிக்கப்பட்டது.

மேகாலயா மாநில வேளாண்துறை அலுவலர்கள், அரிசி, காய்கறிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட
பழப்பயிர்கள் மற்றும் வெர்மிகம்போசிட்டிங் ஃபார்ம்யார்டு உரம் போன்றவைகள் மீதான சமீபத்திய
தொழில்நுட்பங்கள் தொடர்பான கள செயல் விளக்கங்களால் பெரிதும் பயன்பெற்றனர். இவர்கள் இனி,
தங்களது மாநிலத்திலுள்ள விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பார்கள்" என்று கூறினார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்திய மாநிலங்கள் மற்றும் வேளாண்துறை பல்கலைகழகங்களைச்
சேர்ந்த வேளாண் அலுவலர்களை குழுக்களாக வரவழைத்து, டாஃபே நிறுவனம் அவர்களுக்கு சிறப்புப்
பயிற்சியை அளிக்கவுள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர் ஓட்டுதல், அமலாக்கங்கள் பயன்பாடு
மற்றும் வேளாண் மேலாண்மை போன்ற பயற்சிகளை வழங்கும் திட்டம் ஒன்றினையும் துவக்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.

“இத்தகையதொரு முன்முயற்சியை ஒரு தனியார் நிறுவனம் மட்டும் மேற்கொள்ள முடியாது. மைய
மற்றும் மாநில அளவில், வேளாண் துறைகள் மற்றும் முன்னணி வேளாண் ஆராய்ச்சி மையங்களின்
ஆதரவும் மற்றும் கூட்டாண்மைகளும் இதற்குத் தேவை. இந்த அணுகுமுறையின் வழியாக, வடகிழக்கு
மாநிலங்களின் வேளாண் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்றும், புதிய வேலை
வாய்ப்புகள் உயரும் என்றும் மற்றும் அதன் காரணமாக கிராமப்புற பொருளாதாரங்கள் மேம்படும்
என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார் டாஃபே நிறுவனத்தின் திட்ட செயல்திட்டம் மற்றும்
நிறுவனத் தொடர்புகள் பிரிவின் தலைமை செயல் அலுவலர் டி.ஆர் கேசவன்.

சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட்
லிமிடெட் (TAFE)) ஒரு உலகளாவிய டிராக்டர் உற்பத்தி நிறுவனம். இது உலகளவில் டிராக்டர்
உற்பத்தியில் மூன்றாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் இந்திய
அளவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழ்கிறது.

இந்நிறுவனம், சப் 100 ஹெச்.பி வகையினத்தில், காற்று கொண்டு குளிரூட்டப்படும் மற்றும் தண்ணீர் கொண்டு குளிரூட்டப்படும் அடித்தளங்கள் இரண்டிலும், உற்பத்திகளை மேற்கொள்கிறது மற்றும் டாஃபே, மாசே ஃபர்குஸன் மற்றும் எய்ச்சர் பிராண்டுகளின் கீழ் அவற்றை சந்தையாக்கல் செய்கிறது. மேலும், சிறு விவசாயிகளின் தேவைப்பாடுகளை ஈடேற்றும் வகையில், சப் 20 ஹெச்பி வகையினத்தில் கேப்டன் டிராக்டர்ஸ் என்ற பெயரில் தனது தயாரிப்புகளை இந்நிறுவனம் சந்தையாக்கல் செய்து வருகிறது.

இந்தியா தவிர, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட 77க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளன.

 

English Summary

Seeking to spread the knowledge of farm mechanization for improving agricultural production, India’s second largest tractor company TAFE has embarked on a national training program called ‘Cultivating India’, in line with their corporate philosophy of ‘Cultivating the World’.

TAFE has drawn up a detailed training module under which agri-scientists and officials of agricultural departments of various states are given a hands-on training at the company’s agricultural research centre J Farm. Established by TAFE in the memory of the founder of Amalgamations Group, Mr. S. Anatharamakrishnan, in 1964, J Farm specializes in adaptive research to help the farmers maximize their productivity and income.  Supporting farmers in Tamil Nadu with farm management and best farming practices and supplying them quality seeds for cultivation, the company has now decided to spread the movement pan-India.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ