Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவில் சொத்து வாங்குவதில் இந்தியர்கள் 5-ம் இடம்!!

அமெரிக்காவில் சொத்து வாங்குவதில் இந்தியர்கள் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் சொத்து வாங்குபவர்களில் கணடா(23 % ), சீனா (12 %), மெக்ஸிகோ (8 %), இந்தியா மற்றும் லண்டன் (5 %) என முன்னிலை வகிக்கின்றனர்.

இதில் இந்தியர்கள் கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி மாகாணம் உள்ளிட்டவைகளை முதன்மை தேர்வாக கொண்டுள்ளனர். இதில் 90 % பேர் குடும்பத்தினர் வசிப்பதற்காகவும், 7 % வர்த்தக  பயன்பாட்டிற்கும் வாங்குகின்றனர் என இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் சமீப நாட்களாக வெளிநாட்டு குடிமக்கள், அமெரிக்காவில் இடம், வீடு உட்பட ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட சொத்துகள் வாங்குவது குறைந்துள்ளது என  புரோபைல் ஆஃப் இன்டர்நேஷனல் ஹோம் பையிங் ஆக்விட்டி தெரிவித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ