Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் வருமானம்: ஆம்ஃபி மற்றும் கிரைசில் இண்டெக்ஸ்...


அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (ஆம்ஃபி) மற்றும் கிரைசில் நிறுவனம் இணைந்து மியூச்சுவல் ஃபண்ட்  ஃபெர்பாமென்ஸ் இண்டிசஸ் என்பதை தொடங்கியுள்ளன.

. ஈக்விட்டி ஃபண்ட்ஸ், ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (இ.எல்.எஸ்.எஸ்), கடன் ஃபண்டுகள், மணி மார்க்கெட் ஃபண்ட்ஸ் மற்றும் ஹய்பிரிட் ஃபண்ட்ஸ்   உள்ளிட்ட ஐந்து வகை ஃபண்ட்களுக்கு இந்த தரக்குறியீடு அளிக்கப்படுகிறது.


இந்த ஐந்து வகை மியூச்சுவல் ஃபண்டுகளின் சராசரி வருமானத்தை  முதலீட்டாளர்களுக்கு கூறுவதே இதன் நோக்கம்.
ஃபண்ட் முதலீட்டில்  முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதும், ஃபண்டுகள் குறித்த வெளிப்படையான தகவல்களும் இந்த குறியீடு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 1997 ம் வருடம் முதல் வருமான ஒப்பீடு அளிக்கப்படுகிறது.   கிரைசில்-ஆம்ஃபி ஈக்விட்டி ஃபண்ட் பெர்ஃபாமன்ஸ் இண்டக்ஸ், கிரைசில்-ஆஃம்பி இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் பெர்ஃபாமன்ஸ் இண்டக்ஸ், கடன் பெர்ஃபாமன்ஸ் இண்டக்ஸ், மணி மார்க்கெட் பெர்ஃபாமன்ஸ் இண்டக்ஸ், ஹய்பிரிட் பெர்ஃபாமன்ஸ் இண்டக்ஸ் ஆகிய ஐந்து  விதமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியன் மியூச்சுவல் ஃபண்ட் இண்டஸ்ட்ரியில் இந்த கிரைசில்-ஆஃம்பி பெர்ஃபார்மன்ஸ் இண்டக்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஃம்பே நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹெச்.என்.சினார் தெரிவித்தார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ